ADDED : மார் 24, 2026 07:43 PM
சிவகாசி : சிவகாசி பாறைப்பட்டி சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு வந்த சிவகாசி ஐயப்பன் காலனியைச் சேர்ந்த குரு கிஷோரிடம் இருந்து ரூ.1.50 லட்சம், பழனியாண்டவர் காலனியை சேர்ந்த சரவணகுமாரிடம் ரூ.2.73 லட்சம், சிவகாசியை சேர்ந்த ராஜகோபாலிடம் ரூ.75 ஆயிரத்து 600, வடமலாபுரம் சோதனை சாவடியில் ராஜலட்சுமியிடம் ரூ.60 ஆயிரத்து 500 என மொத்தம் ரூ. 5 லட்சத்து 59 ஆயிரத்து 100 ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
*நரிக்குடி மானாசாலை சோதனை சாவடியில் திருச்சுழி துணை தாசில்தார் செல்வம், எஸ். எஸ். ஐ. , முனியாண்டி, போலீசார் ரவிச்சந்திரன், சிவா : திலகராஜ் தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டையில் இருந்து நரிக்குடி வழியாக சிவகங்கைக்கு முட்டை ஏற்றி சென்ற சரக்கு வாகனத்தை மறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அருப்புக்கோட்டையை சேர்ந்த முட்டை வியாபாரி ஜெயராமிடம் உரிய ஆவணங்கள் இன்றி கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 81 ஆயிரம் இருந்தது. அதனை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் ஒப்படைத்தனர். அவர் கருவூலத்தில் ஒப்படைத்தார்.
