தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நேற்றைய தேர்தல் 'சோதனை'

 நேற்றைய தேர்தல் 'சோதனை'

 நேற்றைய தேர்தல் 'சோதனை'


ADDED : மார் 25, 2026 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 05:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி: சிவகாசி பாறைப்பட்டி சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு வந்த சிவகாசி ஐயப்பன் காலனியைச் சேர்ந்த குரு கிஷோரிடம் இருந்து ரூ.1.50 லட்சம், பழனியாண்டவர் காலனியை சேர்ந்த சரவணகுமாரிடம் ரூ.2.73 லட்சம், சிவகாசியை சேர்ந்த ராஜகோபாலிடம் ரூ.75 ஆயிரத்து 600, வடமலாபுரம் சோதனை சாவடியில் ராஜலட்சுமியிடம் ரூ.60 ஆயிரத்து 500 என மொத்தம் ரூ. 5 லட்சத்து 59 ஆயிரத்து 100 ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

*நரிக்குடி மானாசாலை சோதனை சாவடியில் திருச்சுழி துணை தாசில்தார் செல்வம், எஸ். எஸ். ஐ. , முனியாண்டி, போலீசார் ரவிச்சந்திரன், சிவா : திலகராஜ் தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அருப்புக்கோட்டையில் இருந்து நரிக்குடி வழியாக சிவகங்கைக்கு முட்டை ஏற்றி சென்ற சரக்கு வாகனத்தை மறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அருப்புக்கோட்டையை சேர்ந்த முட்டை வியாபாரி ஜெயராமிடம் உரிய ஆவணங்கள் இன்றி கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 81 ஆயிரம் இருந்தது. அதனை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் ஒப்படைத்தனர். அவர் கருவூலத்தில் ஒப்படைத்தார்.

*விருதுநகர் அருகே ஓண்டிப்புலி நாயக்கனுாரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் கோட்ட நத்தத்தில் நவீன் பயர் ஓர்க்ஸ் என்ற ஆலையை நடத்தி வருகிறார்.

இவர் காரில் நேற்று காலை 10:45 மணிக்கு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக ரூ.61 ஆயிரத்து 500 கொண்டு சென்றார். அப்போது ஆர்.ஆர்.,நகரில் வைத்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் பாலமுருகன், எஸ்.எஸ்.ஐ., முருகானந்தம் தலைமையிலான போலீசார் காரை சோதனை செய்த போது ஆவணமின்றி கொண்டு சென்ற பணத்தை பறிமுதல் செய்து விருதுநகர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து பணத்தை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us