ADDED : ஏப் 03, 2026 05:59 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 2ம் நாளாக நேற்று நடந்த வேட்புமனு தாக்கலில் விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் மட்டும் சுயேச்சை ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
முதல் நாள் 19 பேர், தற்போது ஒருவர் என இவருடன் சேர்த்து 20 பேர் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று அரசு விடுமுறை என்பதால் நாளை(ஏப்.4), திங்கள்(ஏப்.6) இரு நாட்கள் மட்டுமே உள்ளன. இன்னும் பிரதான கட்சி களான அ.தி.மு.க., தே.மு.தி.க., த.வெ.க., வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. விரைவில் தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
