தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதாரப் பணிகளில் தேக்கம்:அவதியில் அனுப்பன்குளம் ஊராட்சி

துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதாரப் பணிகளில் தேக்கம்:அவதியில் அனுப்பன்குளம் ஊராட்சி

துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதாரப் பணிகளில் தேக்கம்:அவதியில் அனுப்பன்குளம் ஊராட்சி


UPDATED : ஜூன் 15, 2026 05:20 PM

ADDED : ஜூன் 15, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2026 05:20 PM ADDED : ஜூன் 15, 2026 05:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகாசி:துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதாரப் பணிகளில் தேக்கம், குடிநீர் பற்றாக்குறை என சிவகாசி அருகே அனுப்பன்குளம் ஊராட்சி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.

ஆண்டியாபுரம்,மயிலாடுதுறை, பேராபட்டி, இந்திரா நகர், மீனம்பட்டி, ராமச்சந்திராபுரம், சுந்தரராஜபுரம், ராமசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட அனுப்பன்குளம் ஊராட்சியில் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதாரப் பணியில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. தவிர அனைத்து பகுதிகளிலும் வாறுகால் துார்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. ஊராட்சியில் பெரும்பான்மையான பகுதிகளுக்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் ஊராட்சி முழுவதுமே குடிநீர் பற்றாக்குறை உள்ளது.

குறிப்பாக இந்திரா நகரில் இதுவரையிலும் இத்திட்டத்தின் கீழ் எந்த பணியும் மேற்கொள்ளப்படாததால் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தெருவிளக்குகள் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகின்றனர். அனுப்பன்குளம் கண்மாயில் வரத்துக்கால்வாயில் முட்புதர்கள் ஆக்கிரமித்து உள்ளது. ஆண்டியாபுரத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரையிலும் பயன்பாட்டிற்கு வரவில்லை. சந்தனமாரி நகரில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு முடிய மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டும் பயன்பாட்டிற்கு வரவில்லை. மீனம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே ரோட்டோரத்திலேயே குப்பை கொட்டப்பட்டு சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.

கட்டியும் திறக்காத கட்டடம்

அனுப்பன்குளத்தில் துணை சுகாதார நிலையம் தற்காலிகமாக இ சேவை மைய கட்டடத்தில் இட நெருக்கடியில் செயல்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து ஊராட்சி அலுவலகம் அருகே புதிதாக துணை சுகாதார நிலையத்திற்கு என புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையிலும் பயன்பாட்டிற்கு வரவில்லை.

கோபி கண்ணன், முன்னாள் கவுன்சிலர்,

,

குடிநீரில்லை

ஊராட்சி முழுவதுமே பெரும்பான்மையான பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பணிகளை முழுமையாக முடித்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். தெரு விளக்குகள் பற்றாக்குறையின்றி பொருத்த வேண்டும்.

கண்ணன், முன்னாள் கவுன்சிலர்

துார்வாராத வாறுகால்

, பேரா பட்டியில் தற்போது வரையிலும் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. தவிர தெருவிளக்குகள் பற்றாக்குறையாலும் மக்கள் சிரமப்பட நேரிடுகிறது. வாறுகால் துார்வாரப்படாததால் கழிவுநீர் வெளியேற வழி யின்றி ஒரே இடத்தில் தேங்கி விடுகின்றது. எனவே சுகாதார பணியில் கவனம் செலுத்த வேண்டும்.

கந்த வேல், தொழிலாளி

சுகாதார பணிகள் சுணக்கம்

ஊராட்சியில் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் வாறுகால் துார்வாருதல் குப்பை சேகரித்தல் போன்ற சுகாதார பணிகளில் தேக்கம் ஏற்படுகிறது. எனவே கூடுதல் துாய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

ஜவகர், முன்னாள் வார்டு உறுப்பினர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us