தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தார்பெயர்ந்த ரோடு, திறக்காத சுகாதாரவளாகங்கள், குடிநீர் தட்டுப்பாடு:சிரமத்தில் முள்ளிச் செவல் ஊராட்சி மக்கள்

தார்பெயர்ந்த ரோடு, திறக்காத சுகாதாரவளாகங்கள், குடிநீர் தட்டுப்பாடு:சிரமத்தில் முள்ளிச் செவல் ஊராட்சி மக்கள்

தார்பெயர்ந்த ரோடு, திறக்காத சுகாதாரவளாகங்கள், குடிநீர் தட்டுப்பாடு:சிரமத்தில் முள்ளிச் செவல் ஊராட்சி மக்கள்


UPDATED : ஜூன் 29, 2026 05:52 PM

ADDED : ஜூன் 29, 2026 05:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2026 05:52 PM ADDED : ஜூன் 29, 2026 05:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாத்துார்:தார்பெயர்ந்த ரோடு, திறக்காத சுகாதாரவளாகங்கள், குடிநீர் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளால் சாத்துார் ஊராட்சி ஒன்றியம் முள்ளிச் செவல் ஊராட்சி மக்கள் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.

முள்ளிச் செவல் ஊராட்சியில் கப்பு ரெட்டிபட்டி, பெருமாள் பட்டி, முள்ளிச் செவல், சமத்துவபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன.

முள்ளிச் செவலில் மட்டும் முக்கிய தெருக்களில் சிமிண்ட் ரோடு, பேவர் ப்ளாக் கல் பதிக்கப்பட்டுள்ளது. ஊராட்சியில் உள்ள தெரு அடி குழாய்கள் பல பழுதடைந்து உடைந்து காணப்படுகிறது. கப்பு ரெட்டிபட்டியில் இ.சேவை மைய கட்டடம் கட்டி செயல்பாட்டிற்கு வராமல் காட்சிப் பொருளாக உள்ளது.

இந்தப் பகுதியில் தரமின்றி அமைக்கப்பட்ட தார்ரோடு சேதமடைந்து கால்களை பதம் பார்க்கும் வகையில் உள்ளது. சமத்துவபுரத்தில் ஒரு ஆண்டிற்கு முன்பு கட்டப்பட்ட சுகாதார வளாகம் செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது. இங்கு முறையான வாறுகால் வசதி இல்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் அனைத்து சாலைகளும் தார் சாலையாக மாற்றப்பட்டது. இந்த தார் சாலை தரம் இன்றி அமைக்கப்பட்டதால் தற்போது இந்த தார் சாலை முழுவதும் தார் பெயர்ந்து மன்சாலையாக மாறி வருகிறது.

பெருமாள் பட்டியில் உள்ள சிறிய தெருக்களில் முறையான ரோடு கழிவுநீர் செல்ல வாறுகால் வசதி இல்லை. பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகங்கள் ,ரேஷன் கடை புதிய கட்டடங்கள் திறக்கப்படாமல் உள்ளன.

குடிநீர் வசதியும் பற்றாக்குறையாக உள்ளது. 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் மக்கள் வண்டிகளில் விற்பனைக்காக கொண்டு வரப்படும் தண்ணீரை தினமும் விலைக்கு வாங்கி குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.

தரமற்ற பணிகளால் மக்கள் பாதிப்பு

ஊராட்சியில் அமைக்கப்படும் சிமெண்ட் ரோடு, தார் ரோடு, பேவர் பிளாக் ரோடு போன்ற பணிகள் தரமற்ற பணிகளாக நடந்து வருகிறது. இதனால் பணிகள் முடிந்த சில மாதங்களிலேயே இவை சேதமடைந்து விடுகின்றன. புதிய கட்டடம் கட்டும் கட்டுமான பணிகளும் தரமின்றி உள்ளதால் அரசு நிதி வீணாகி வருகிறது.

செல்வம், கொத்தனார்.

குடிநீர் வசதி தேவை

ஊராட்சியில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்வதால் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. வண்டிகளில் விற்பனை செய்யப்படும் குடிநீரை குடம் ரூபாய் 12 கொடுத்து விலைக்கு வாங்கி குடிநீராக பயன்படுத்தி வருகிறோம். இதனால் கூடுதல் செலவு ஏற்படுகிறது. தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகாலிங்கம், விவசாயி,

பழுதாகும் தெரு விளக்குகள்

தெருவிளக்குகள் அடிக்கடி பழுதாகி விடுகிறது. இதை சரி செய்ய ஊராட்சியில் புகார் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதில்லை. விளக்கை சரி செய்ய இரண்டு மூன்று நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள் .தெருவிளக்குகள் பழுது காரணமாக இரவு நேரத்தில் மக்கள் கையில் டார்ச் லைட்டுடன் நடமாடும் நிலை உள்ளது.

கோவிந்தராஜ், பட்டாசு தொழிலாளி.

செயல்பாட்டிற்கு வராத

சுகாதார வளாகம்

முள்ளிச் செவல், சமத்துவபுரம் பகுதிகளில் புதியதாக சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு உள்ளது ஆனால் இதை இன்றுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை.சமத்துவ புரத்தில் உள்ள சுகாதார வளாகம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இதனால் அரசு நிதி வீணாகி வருகிறது.புதிய சுகாதார வளாகங்களை அமைத்து தர வேண்டும் பழைய சுகாதார வளாகத்தையும் சீரமைக்க வேண்டும். ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது .இதை திறந்து வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தங்கவேலு, விவசாயி.

(சார் படங்கள் தனி பைலாக அனுப்புகிறேன்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us