தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரோடு, வாறுகால் சேதம், குடிநீர் பற்றாக்குறை: கடுப்பில் கங்கர்செவல் ஊராட்சி மக்கள்

ரோடு, வாறுகால் சேதம், குடிநீர் பற்றாக்குறை: கடுப்பில் கங்கர்செவல் ஊராட்சி மக்கள்

ரோடு, வாறுகால் சேதம், குடிநீர் பற்றாக்குறை: கடுப்பில் கங்கர்செவல் ஊராட்சி மக்கள்


UPDATED : செப் 21, 2026 04:11 PM

ADDED : செப் 21, 2026 03:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2026 04:11 PM ADDED : செப் 21, 2026 03:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகாசி:தெருக்களில் ரோடு, வாறுகால் சேதம், குடிநீர் பற்றாக்குறை என வெம்பக்கோட்டை ஒன்றியம் கங்கர்செவல் ஊராட்சி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.

லட்சுமியாபுரத்தை உட்கிராமமாகக் கொண்ட கங்கர்செவல் ஊராட்சியில் ரோடு, வாறுகால் சேதம், குடிநீர் பற்றாக்குறை முக்கிய பிரச்னையாக உள்ளது. லட்சுமியாபுரம், கங்கர்செவலில் அனைத்து தெருக்களிலுமே வாறுகால் சேதமடைந்திருப்பதோடு துார்வாரவும் இல்லை. ஊராட்சியில் ஒரே ஒரு துாய்மை பணியாளர் இருந்த நிலையில் அவர் இரு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பின்னர் துாய்மை பணியாளர் பணியிடம் நிரப்பவில்லை. இதனால் ஊராட்சி முழுவதுமே சுகாதாரப் பணிகள் நடைபெறவில்லை. 30 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் ஸ்டாப்பில் ரோட்டோரத்தில் கட்டப்பட்ட மகளிர் சுய உதவி குழு கட்டடம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்துடனே பஸ்சிற்காக காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சேதமடைந்த கட்டடம் அருகே நடமாடுகின்றனர். இந்தக் கட்டடத்தை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும். கங்கர் செவலில் மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் அடைந்துள்ளது. கிராம இ சேவை மையத்தில் மராமத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

வீராசாமி, ரியல் எஸ்டேட், ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டும் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இங்கு உள்ளூர் தண்ணீர் ஆதாரம் இருந்தும் முழுமையாக வினியோகம் செய்ய முடியவில்லை. எனவே கங்கர்செவலில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு லட்சுமியாபுரத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலைப் குடிநீர் தொட்டி கூடுதலாக கட்ட வேண்டும்.

சுப்புலட்சுமி, குடும்பத்தலைவி, தெருக்களில் வாறுகால் சேதமடந்து இருப்பதோடு துார் வாரவும் இல்லை. இதனால் மழைநீர் கழிவுநீர் தெருவிலேயே தேங்கி விடுகின்றது. துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. தவிர தெருக்களில் ரோடும் சேதம் அடைந்துள்ளது. எனவே ரோடு வாறுகாலை சீரமைத்து சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

சேது பாண்டியன், டிரைவர், இங்குள்ள சுகாதார வளாகம் சேதமடைந்து பயன்பாட்டில் இல்லை. கங்கர்செவல், லட்சுமியாபுரத்தில் புதிதாக சுகாதார வளாகம் கட்ட வேண்டும். ஊராட்சி அலுவலகம் சேதம் அடைந்துள்ள நிலையில் இட நெருக்கடியில் இயங்குகிறது. எனவே புதிய கட்டடம் கட்ட வேண்டும். திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு சமுதாயக்கூடம் கட்ட வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us