தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ உங்கள் ஊராட்சி

உங்கள் ஊராட்சி

உங்கள் ஊராட்சி


ADDED : செப் 28, 2026 04:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 04:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* சேதமான சமுதாய கூடம் , குளியல் தொட்டி , உடையும் குடிநீர் குழாய்,

*சிரமத்தில் மண்டபசாலை ஊராட்சி மக்கள்

திருச்சுழி, செப். 29-

திருச்சுழி அருகே மண்டபசாலை ஊராட்சியில் சேதமான சமுதாய கூடம், விரிசல் விழுந்த குளியல் தொட்டி, பகிர்மான குழாய் உடைப்பால் தண்ணீர் பற்றாக்குறை உட்பட பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது மண்டபசாலை ஊராட்சி, இதில், சிலுக்கபட்டி, லட்சுமிபுரம், புதூர் உள்ளிட்ட ஊர்கள் உள்ளன. ஊராட்சியில் போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. சிலுக்கபட்டியில் அருந்ததியினர் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் இல்லை. இங்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாயக்கூடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் பயன்படுத்த முடியாமல் உள்ளது. இடித்து விட்டு புதியதாக கட்ட வேண்டும் .ஊராட்சி மூலம் தாமிரபரணி கூட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் பகிர்மான குழாயை ரோட்டின் நடுவில் அமைத்துள்ளனர். இதனால் வாகனங்கள் செல்லும் போது அழுத்தத்தில் அடிக்கடி குழாய்கள் லீக் ஆகி, தண்ணீர் வினியோகம் தடை படுகிறது. மக்கள் தண்ணீரை குடம் 10 ரூபாய் கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். குளியல் தொட்டி விரிசல் கண்டு விழும் நிலையில் உள்ளது. ஊராட்சி மூலம் 2 போர்வெல் போட்டுள்ளனர். ஆனால், பயன்பாட்டிற்கு வரவில்லை. மயானம் இருந்தும் பயன் இல்லை. மின்விளக்கு தண்ணீர் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாததால் இரவு நேரங்களில் இறுதிச்சடங்குகள் செய்வதற்கு சிரமமாக உள்ளது.

ரெட்டியபட்டியில் இருந்து சிலுக்க பட்டி வரும் வழியில் உள்ள தரை பால தடுப்புசுவர் இன்றி, சேதமடைந்து இருப்பதால் இரவு நேரங்களில் வாகனங்கள் விழுந்து விபத்து ஏற்படுகிறது. பொது கழிப்பறைகள் இருந்தும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. ஊராட்சிக்குட்பட்ட ஊருணி பரபரப்பு இன்றி சுகாதார கேடாக உள்ளது.

* உடையும் குடிநீர் குழாய்

இளங்கோ, விவசாயி : சிலுக்கபட்டிக்கு வரும் குடிநீர் பகிர்மான குழாயை ரோட்டை நடுவில் அமைத்துள்ளனர். வாகனங்கள் செல்லும்போது குழாய்கள் அடிக்கடி உடைந்து குடிநீர் வருவது தடைபடுகிறது. குடிநீரை அதிக விலை கொடுத்து வாங்குகிறோம். ஊருக்கு குடிநீர் வந்தும் பயன் இல்லை. பகிர்மான குழாயை ரோட்டில் ஓரங்களில் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* சுகாதார கேட்டில் ஊருணி

ராமமூர்த்தி, தொழிலாளி : ஊரில் உள்ள ஊரணி பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி உள்ளது. இதில் குப்பைகளும் கழிவு நீரும் சேர்ந்து சுகாதார கேடாக இருக்கிறது. ஊருணியை தூர்வாரி, மழைநீர் சேர்கின்ற வகையில் நடவடிக்கை எடுத்தால் ஊரில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்கலாம்.

லட்சுமிபுரத்தில் சமுதாய கூடம் கட்ட வேண்டும். இங்குள்ள கால்நடை மருத்துவமனை கட்டடம் சேதமடைந்துள்ளது. புதியதாக கட்ட வேண்டும். இங்கு 108 ஆம்புலன்ஸ் நிறுத்த இட வசதி செய்ய வேண்டும்.

புதூரில் சமுதாய கூடம் வேண்டும். தெருக்களுக்கு பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும். பொது கழிப்பறை கட்ட வேண்டும்.

* வளர்ச்சிப் பணிகள் இல்லை

சிவா ஆனந்த், தனியார் ஊழியர் : மண்டபசாலை ஊராட்சியில் தேவையான வளர்ச்சி பணிகள் செய்யப்பட வேண்டும். சிலுக்கப்பட்டியில் சேதமடைந்த நிலையில் பல ஆண்டுகளாக சமுதாய கட்டிடம் உள்ளது. குளியல் தொட்டி விரிசல் அடைந்து விழுந்து விடும் நிலையில் உள்ளது. ஊருக்குள் தரமான அரசு கட்டிடங்கள், பொது கழிப்பறை, நவீன சுகாதார வளாகம் அமைக்க வேண்டும்.

____

படங்கள் உள்ளது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us