தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/உங்கள் ஊராட்சி

உங்கள் ஊராட்சி

உங்கள் ஊராட்சி


UPDATED : நவ 23, 2026 05:15 PM

ADDED : நவ 23, 2026 05:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 05:15 PM ADDED : நவ 23, 2026 05:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேதமான ரோடு, சுகாதாரவளாகம், குடிநீர் பற்றாக்குறை

*செவலுார் ஊராட்சி மக்கள் அவதி

சிவகாசி: சேதமான ரோடு, சுகாதாரவளாகம், ஊராட்சி அலுவலகம் கட்டடம், குடிநீர் பற்றாக்குறை என சிவகாசி அருகே செவலுார் ஊராட்சி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.

கிருஷ்ணம நாயக்கன்பட்டியை உள்ளடக்கிய செவலுார் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறை முக்கிய பிரச்னையாக உள்ளது. இங்குள்ள அகதிகள் முகாம் செல்லும் இரண்டு கிலோமீட்டர் துாரமுள்ள ரோடு போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது ரோடு குண்டும் குழியுமாக மிக மோசமாக சேதம் அடைந்துள்ளது. மழைக்காலங்களில் எந்த வாகனமும் சென்று வர முடியவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகம் கட்டடம் சேதம் அடைந்துள்ளது. இதனால் ஊராட்சி அலுவலகம் தற்காலிகமாக இ சேவை மையக் கட்டடத்தில் இயங்குகின்றது. எனவே பழைய கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்ட வேண்டும். ஊராட்சி அலுவலகம் வழியாக செல்லும் ஓடையில் முட்புதர்கள், சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் மழை பெய்தாலும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே ஓடையை முழுமையாக துார்வார வேண்டும். உள்ளூர் ஆதாரத்தின் மூலமாக மட்டுமே கிடைக்கும் குடிநீர் வாரம் ஒரு முறை வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். மாரியம்மன் கோயில் அருகே உள்ள சுகாதார வளாகம் சேதம் அடைந்து பயன்பாட்டில் இல்லை.

முக்கையா, தொழிலாளி,: பஸ் ஸ்டாப் அருகே உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. அருகிலேயே குடியிருப்புகள், ரேஷன் கடை உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்.

சக்திவேல், டிரைவர், செவலுாரில் இருந்து பர்மா காலனி செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது. இங்குள்ள குளியல் தொட்டி மோட்டார் பழுதால் பயன்பாட்டில் இல்லை. மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அகதிகள் முகாம் செல்லும் ரோட்டை சீரமைக்க வேண்டும்.

லட்சுமணன், பால் வியாபாரி, ஊராட்சி அலுவலக கட்டடம் சேதமடைந்த நிலையில் அலுவலகம் இ சேவை மையத்தில் செயல்படுகிறது. மெயின் ரோட்டில் சேதமடைந்துள்ள ஊராட்சி அலுவலக கட்டடம் இடிந்து விழுந்தால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அருகிலேயே சமுதாயக்கூடமும் உள்ளது. எனவே சேதம் அடைந்த கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்ட வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us