/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயில் பயணிகளை வெட்டி திருடிய வழக்கில் வாலிபர் கைது
/
ரயில் பயணிகளை வெட்டி திருடிய வழக்கில் வாலிபர் கைது
ரயில் பயணிகளை வெட்டி திருடிய வழக்கில் வாலிபர் கைது
ரயில் பயணிகளை வெட்டி திருடிய வழக்கில் வாலிபர் கைது
ADDED : பிப் 20, 2025 06:56 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: திருத்தங்கல் ரயில்வே ஸ்டேஷனில் 2024 டிச.1 இரவு படுத்திருந்த கரூரைச் சேர்ந்த லாரி டிரைவர் கிருஷ்ணமூர்த்தி 51, என்பவரையும், மற்றொரு பயணி ஒருவரையும் அரிவாளால் வெட்டி பணம், அலைபேசியையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இச் சம்பவத்தில் திருத்தங்கலைச் சேர்ந்த முத்துக்குமார், சோலைமுத்துராஜா, கண்ணன் ஆகியோரை ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் கைது செய்திருந்தனர். பின்னர் இதில் முத்துக்குமார், கண்ணன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு ஆயுதங்கள் ,அடைக்கலம் கொடுத்தும், திருட்டுப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த திருத்தங்கலை சேர்ந்த விஜய பாண்டி 29, என்பவரை நேற்று ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விருதுநகர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.