UPDATED : ஜூன் 15, 2026 06:41 PM
ADDED : ஜூன் 15, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
காரியாபட்டி:காரியாபட்டி பேரூராட்சியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வாறுகால்கள் கட்டப்பட்டன. பெரும்பாலான இடங்களில் மூடப்பட்டு உள்ளது. கே. செவல்பட்டி, பள்ளத்துப்பட்டி, காமராஜர் காலனி பகுதியில் பிரதான வாறுகால் மூடாமல் திறந்த நிலையில் உள்ளன.
இந்நிலையில் ஜூன் 14 தாலுகா அலுவலகம் அருகே வாறுகால் சுவற்றில் உட்கார முயற்ச்சித்த அச்சம்பட்டியை சேர்ந்த அழகர் 35, ஒருவர் தவறி விழுந்தார். ஆழமான பகுதியாகவும் சேறும், சக்தியும், குப்பை கழிவுகள் நிறைந்து கிடந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலே இறந்தார். தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
