/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆம்னி பஸ் மீது டூ - வீலர் மோதல் வாலிபர் பலி
/
ஆம்னி பஸ் மீது டூ - வீலர் மோதல் வாலிபர் பலி
ADDED : நவ 23, 2024 02:10 AM

சிவகாசி:சிவகாசி அருகே திருத்தங்கலை சேர்ந்தவர் மாரியப்பன், 50. இவர், விருதுநகர் ராமநாதனுக்கு சொந்தமான ஆம்னி பஸ்சை, கோயம்புத்துாருக்கு நேற்று முன்தினம் ஓட்டி சென்றார். சிவகாசி சென்ற அந்த பஸ்சில், ஆறு பயணியர் மட்டுமே இருந்ததால், கூடுதலாக பயணியரை ஏற்ற, சாத்துார் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அனுப்பன்குளம் அருகே இரவு 11:00 மணிக்கு அந்த பஸ் மீது, எதிரே வேகமாக, டூ - வீலரில் வந்த மீனம்பட்டியை சேர்ந்த கார்த்திக், 35, என்பவர் திடீரென மோதினார். இதில், டூ - வீலர் அந்த ஆம்னி பஸ்சில் சிக்கி, கார்த்திக்குடன் இழுத்துச் செல்லப்பட்டது. இதில் அவர் பலியானார்.
ஆம்னி பஸ்சில் டூ - வீலர் உராய்ந்து சென்றதால் தீப்பிடித்தது. இதை அறிந்த டிரைவர் மாரியப்பன், பயணியரை பஸ்சில் இருந்து அவசரமாக இறக்கினார். அடுத்த சில நிமிடங்களில் பஸ் முழுதும் தீப்பிடித்து எரிந்தது.
தகவல் அறிந்து, சிவகாசியில் இருந்து, இரு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், வெகுநேரம் போராடி தீயை அணைத்தனர். இரண்டு வாகனங்கள் மட்டுமே செல்லும் அந்த ரோட்டில், பஸ் தீப்பிடித்து எரிந்ததால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து, கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

