ADDED : பிப் 13, 2025 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:விருதுநகர் அருகே சின்னதாதம்பட்டியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன் 26. இவர் பொறியியல் முடித்து ஆவியூரில் டூவீலர் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
இவரின் தோட்டத்தில் பிப். 11 காலை 9:30 மணிக்கு இரும்பு கோகாலியை கொடிக்காய் மரத்தின் அருகே போட்டு அதில் ஏறி இரும்பு கொக்கி போட்ட மூங்கில் தொரட்டியால் கொடிக்காய் பறித்து கொண்டிருந்தார். அப்போது கொக்கி அருகே சென்ற மும்முனை மின்சார ஒயரில் பட்டு மின்சாரம் தாக்கியதில் மாதேஸ்வரன் மயங்கி கீழே விழுந்து இறந்தார். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.