ADDED : ஜூலை 15, 2025 03:17 AM
தகாத உறவால் இளைஞர் கொலை
விருதுநகர்: விருதுநகர் அருகே அல்லம்பட்டி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து 30. இவருக்கு திருமணமாகாததால் தனியாக வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். இவருக்கும் பெரியமருளுத்தை சேர்ந்த அருண் 30, என்பவரின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனது மனைவியுடனான உறவை துண்டிக்க சொல்லியும் தொடர்ந்து பழகி வந்ததால் நேற்று மதியம் 2:15 மணிக்கு மாரிமுத்துவை, அவரது வீட்டில் வைத்து அருண் வெட்டி கொலை செய்தார். கிழக்கு போலீசார் சூலக்கரையில் அருணை கைது செய்தனர்.
-- 30 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது
ராஜபாளையம்: ராஜபாளையம் டி.பி மில்ஸ் ரோட்டில் மளிகை கடை நடத்தி வந்த கரிவலம் வந்த நல்லுாரை சேர்ந்த இசக்கிமுத்து 36, வீட்டில் குட்காவை வட மாநிலங்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்து 1.5 லட்சம் மதிப்புள்ள 30கிலோ குட்கா ரூ.36 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மது பாட்டில் பறிமுதல்: ஒருவர் கைது
சாத்துார்: வெம்பக்கோட்டை விஜய கரிசல் குளத்தை சேர்ந்தவர் பாண்டியன் ,63.காட்டுப்பகுதியில் 180 மி.லி.அளவு கொண்ட 26 மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றார்.ரோந்து சென்ற போலீசார் அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
மாமாவுடன் தகராறு: பெட்ரோல் பாட்டில் வீச்சு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மம்சாபுரத்தை சேர்ந்தவர் கடற்கரை 55,பெயிண்டர். இவர் தனது பேரனுக்கு நேற்று முன்தினம் தென்காசி மாவட்டம் குருவிகுளம் கருப்பசாமி கோயிலில் மொட்டை போடுவதற்காக உறவினர்களை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வந்த உறவினர் கதிரேசனிடம், சகோதரி மகன் முனீஸ்வரன் 25, மது போதையில் தகராறு செய்துள்ளார். அப்போது முனீஸ்வரனை கடற்கரை கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு , கடற்கரை வீட்டு முன்பு பெட்ரோல் பாட்டிலை வீசி முனீஸ்வரன் தீ வைத்துள்ளார். இதில் அவருக்கு இரண்டு கால்களில் தீக்காயம் ஏற்பட்டு ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மம்சாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
விருதுநகர், ஜூலை 15 -
விருதுநகர் அருகே அல்லம்பட்டி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து 30. இவருக்கு திருமணமாகாததால் தனியாக வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். இவருக்கும் பெரியமருளுத்தை சேர்ந்த அருண் 30, என்பவரின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தனது மனைவியுடனான உறவை துண்டிக்க சொல்லியும் தொடர்ந்து பழகி வந்ததால் நேற்று மதியம் 2:15 மணிக்கு மாரிமுத்துவை, அவரது வீட்டில் வைத்து அருண் வெட்டி கொலை செய்தார். கிழக்கு போலீசார் சூலக்கரையில் அருணை கைது செய்தனர்.