/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தி.மு.க., தொழிற்சங்க நிர்வாகிகளான ஓய்வு கண்டக்டர்களுக்கு மீண்டும் பணி இளைஞர்கள் குமுறல்

ADDED : ஜூன் 06, 2025 02:17 AM
விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் சாத்துார் அரசு போக்குவரத்து பணிமனையில் தி.மு.க., தொழிற்சங்க நிர்வாகிகளான ஓய்வு பெற்ற கண்டக்டர்கள் 5 பேருக்கு அவர்கள் பணிபுரிந்த அதே பஸ்களில் மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 9 அரசு போக்குவரத்து பணிமனைகளில் 462 பஸ்கள் உள்ளன. பணியாளர்களின் எண்ணிக்கை 2430 ஆகும். கடந்த மாதத்துடன் டிரைவர்கள், கண்டக்டர்கள், டெக்னீசியன்கள் என மொத்தம் 29 பேர் ஓய்வு பெற்றனர்.
இதனால் ஏற்படும் தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க தினக்கூலி அடிப்படையில் டிரைவர், கண்டக்டர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
சாத்துார் அரசு போக்குவரத்து பணிமனையில் தி.மு.க., தொழிற்சங்க நிர்வாகிகளான 5 கண்டக்டர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றனர்.
இவர்கள் தற்போது தினக்கூலி அடிப்படையில் ஏற்கனவே பணியாற்றிய திருச்சி வழித்தடம், கோவை வழித்தடம், திருச்சி, தென்காசி, ஏழாயிரம்பண்ணை வழித்தட பஸ்களில் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ. 690 + படி கொடுக்கப்படுகிறது. அரசு போக்குவரத்து கழகத்தில் புதிதாக நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்படாததால் தினக்கூலியாக படித்த இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இது போன்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பையும் தட்டி பறிக்கும் நோக்கத்தில் தி.மு.க., தொழிற்சங்க நிர்வாகிகள் ஓய்வு பெற்ற பின்பு மீண்டும் அதே பஸ்களில் பணியாற்றுவதால் சக தொழிலாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.