ADDED : டிச 06, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள், அடிப்படை பணிகள் குறித்து திருநெல்வேலி மண்டல இயக்குனர் விஜயலட்சுமி நேற்று ஆய்வு செய்தார்.
நேற்று காலை நகராட்சி அலுவலகத்திற்கு வந்த மண்டல இயக்குனரை கமிஷனர் பிச்சைமணி, பொறியாளர் கோமதி சங்கர், நகர அமைப்பு அலுவலர் வெங்கடேஷ் மற்றும் அலுவலர்கள் வரவேற்றனர். பின் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள், வரி வசூல் முன்னேற்றம் குறித்து ஆலோசித்தார். பின்னர் அறிவுசார் மையம் செயல்பாடுகள் குறித்தும், புது பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை நேரடி ஆய்வு செய்தார்.