sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிக்னிக் ஓட்டல் இடத்தை மீட்க நடவடிக்கை: தனி நீதிபதி உத்தரவு சரியே: ஐகோர்ட் தீர்ப்பு

/

பிக்னிக் ஓட்டல் இடத்தை மீட்க நடவடிக்கை: தனி நீதிபதி உத்தரவு சரியே: ஐகோர்ட் தீர்ப்பு

பிக்னிக் ஓட்டல் இடத்தை மீட்க நடவடிக்கை: தனி நீதிபதி உத்தரவு சரியே: ஐகோர்ட் தீர்ப்பு

பிக்னிக் ஓட்டல் இடத்தை மீட்க நடவடிக்கை: தனி நீதிபதி உத்தரவு சரியே: ஐகோர்ட் தீர்ப்பு


ADDED : செப் 17, 2011 09:20 PM

Google News

ADDED : செப் 17, 2011 09:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள பிக்னிக் ஓட்டல் அமைந்துள்ள இடத்தை மீட்க, சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கலாம் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறுக்கிட, சென்னை ஐகோர்ட் மறுத்து விட்டது.



சென்ட்ரல் ரயில் நிலையம், மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டடத்துக்கு இடையில், 'பிக்னிக்' ஓட்டல் அமைந்துள்ளது.

இந்த இடம், சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமானது. விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கு குத்தகை முறையில் 56 கிரவுண்ட் இடத்தை மாநகராட்சி வழங்கியது. உள்குத்தகை முறையில் பிக்னிக் ஓட்டலுக்கு 13 கிரவுண்ட் இடத்தை, விக்டோரியா அறக்கட்டளை வழங்கியது. 2009ம் ஆண்டு, சென்னை மாநகராட்சியிடம் குறிப்பிட்ட இடத்தை விக்டோரியா அறக்கட்டளை ஒப்படைத்தது. இதையடுத்து, பிக்னிக் ஓட்டல் இருக்கும் இடத்தை மீட்க, சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. இதற்கு தடை கோரி, சென்னை ஐகோர்ட்டில், பிக்னிக் ஓட்டல் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த தனி நீதிபதி, தடை விதிக்க மறுத்துவிட்டார். பிக்னிக் ஓட்டல் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி, இடத்தை மீட்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கலாம் என, தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் மனுக்களை, ஓட்டல் நிர்வாகம் தாக்கல் செய்தது.



மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, ராஜேந்திரன் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து, தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். எந்த அம்சங்களையும் பரிசீலிக்காமல், அதிகார வரம்பை தவறாக பயன்படுத்தினால் தான், அந்த உத்தரவில் ஐகோர்ட் குறுக்கிட முடியும். மற்றபடி அவ்வளவு எளிதில் குறுக்கிட முடியாது. இந்த வழக்கை பொறுத்தவரை, பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடம், மனுதாரர்கள் வசம் உள்ளது. இதற்கு அவர்கள் அளிக்கும் மாத வாடகை 4,000 ரூபாய் தான். வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு தான், மனுதாரர்கள் தடை உத்தரவு பெற உரிமையில்லை என, தனி நீதிபதி முடிவுக்கு வந்துள்ளார். அந்த உத்தரவில் குறுக்கிடத் தேவையில்லை. மனுதாரர்கள் கோரியபடி இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தால், சென்னை நகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு தடங்கல் ஏற்பட்டிருக்கும். இவ்வாறு 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.








      Dinamalar
      Follow us