ஊட்டி பூங்காவில் உலா வரும் குரங்குகள் : சுற்றுலா பயணிகள் அச்சம்
ஊட்டி பூங்காவில் உலா வரும் குரங்குகள் : சுற்றுலா பயணிகள் அச்சம்
ADDED : ஜூலை 27, 2011 09:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் உலா வரும் குரங்குகளின் சேட்டை அதிகரித்து வருவதால், சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு ஆண்டுதோறும் 22 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவின் மேல் பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு வன விலங்குகளின் நடமாட்டம் அவ்வப்போது இருப்பது வழக்கம்.
சமீபகாலமாக, குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. தாவரவியல் பூங்காவில் ஊடுருவியுள்ள குரங்குகள் சுற்றுலா பயணிகளுக்கு தொல்லை கொடுத்து வருகின்றன. சுற்றுலா பயணிகள் புல்தரையில் அமர்ந்து இருக்கும்போது கடிப்பதும், பைகளை எடுத்து செல்வதும் தொடர்கிறது. எனவே, பூங்காவில் சுற்றி வரும் குரங்குகளை வனப்பகுதிகளுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.