தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்றவர்களுக்கு அரசு பணி: ஐகோர்ட் கிளை ரத்து
தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்றவர்களுக்கு அரசு பணி: ஐகோர்ட் கிளை ரத்து
ADDED : செப் 23, 2011 11:06 PM
மதுரை: தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்றவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பணி வழங்க வேண்டும் என்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவை ரத்து செய்த மதுரை ஐகோர்ட் கிளை, மீண்டும் இதுகுறித்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது.
தனியார் நர்சிங் கல்லாரிகளில் பயின்றவர்கள் அரசு மருத்துமனைகளில் நர்ஸ் பணி வழங்க கோரி ஐகோர்ட் கிளையில் மனு செய்தனர். அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பணி வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டார். அதை எதிர்த்து அரசு மருத்துவமனை கல்லூரிகளில் பயின்ற நர்ஸ்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த ஐகோர்ட் கிளை பெஞ்ச், மனுவை தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து அரசு மருத்துவமனை கல்லூரிகளில் பயின்ற நர்ஸ்கள் சீராய்வு மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் பெஞ்ச், ''அரசு மருத்துவமனைகளில்வேலை வழங்கப்படும் எனஉறுதியளித்து அரசு நர்சிங் பயிற்சி அளிக்கிறது. தனியார் நிறுவனங்களில் பயில்பவர்களுக்கு அப்படியில்லை. பல்வேறு அம்சங்களை டிவிஷன் பெஞ்ச் கருத்தில் கொள்ளவில்லை. டிவிஷன் பெஞ்ச் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு டிவிஷன் பெஞ்ச் மீண்டும் வழக்கை விசாரிக்க வேண்டும்,'' என உத்தரவிட்டது.