sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நில அபகரிப்பு வழக்குகளில் மாஜி உட்பட தி.மு.க.,வினருக்கு ஜாமின்:ஐகோர்ட் கிளை உத்தரவு

/

நில அபகரிப்பு வழக்குகளில் மாஜி உட்பட தி.மு.க.,வினருக்கு ஜாமின்:ஐகோர்ட் கிளை உத்தரவு

நில அபகரிப்பு வழக்குகளில் மாஜி உட்பட தி.மு.க.,வினருக்கு ஜாமின்:ஐகோர்ட் கிளை உத்தரவு

நில அபகரிப்பு வழக்குகளில் மாஜி உட்பட தி.மு.க.,வினருக்கு ஜாமின்:ஐகோர்ட் கிளை உத்தரவு


ADDED : அக் 05, 2011 12:09 AM

Google News

ADDED : அக் 05, 2011 12:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:திருச்சியில் நில அபகரிப்பு குறித்த இரு வழக்குகளில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, சகோதரர் ராமஜெயம், துணைமேயர் அன்பழகன் மற்றும் கட்சியினருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.துறையூரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு சொந்தமான நிலத்தை கலைஞர் அறிவாலயம் கட்ட அபகரித்ததாக புகார் செய்யப்பட்டது.

இதுகுறித்து நேரு உட்பட 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கில் ஜாமின் கோரி நேரு, சகோதரர் ராமஜெயம், துணைமேயர் அன்பழகன், சவுந்திரபாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., அன்பில்பெரியசாமி, சேகர், தாழைசெல்வி, சவுந்திர ராஜன் மனு செய்தனர். மனு நீதிபதி சி.எஸ்.கர்ணன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் அசோக்குமார், இளங்கோ, ஓம்பிரகாஷ், செந்தில்குமார் ஆஜராயினர். ஜாமினில் விட அரசு கூடுதல் வக்கீல் ராமர் ஆட்சேபம் தெரிவித்தார். இருப்பினும், தி.மு.க.,வினருக்கு ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

ஈரோட்டை சேர்ந்த கருணாநிதிக்கு சொந்தமான நிலத்தை அபகரித்ததாக பதிவான மற்றொரு வழக்கில் ஜாமின் கோரி நேரு, சகோதரர் ராமஜெயம், துணைமேயர் அன்பழகன் மனு செய்தனர். இவ்வழக்கிலும் மூவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி, நீதிபதி உத்தரவிட்டார். நேரு, அன்பழகன் மறுஉத்தரவு வரை திருச்சியில் தங்கி முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டிலும், மற்றவர்கள் மதுரையில் தங்கி முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டிலும் கையெழுத்திட நீதிபதி நிபந்தனை விதித்தார்.






      Dinamalar
      Follow us