sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மீனவர்கள் மீதான தாக்குதலை தேசிய விவகாரமாக கருத வேண்டும்:பிரதமருக்கு ஜெ., கடிதம்

/

மீனவர்கள் மீதான தாக்குதலை தேசிய விவகாரமாக கருத வேண்டும்:பிரதமருக்கு ஜெ., கடிதம்

மீனவர்கள் மீதான தாக்குதலை தேசிய விவகாரமாக கருத வேண்டும்:பிரதமருக்கு ஜெ., கடிதம்

மீனவர்கள் மீதான தாக்குதலை தேசிய விவகாரமாக கருத வேண்டும்:பிரதமருக்கு ஜெ., கடிதம்


ADDED : அக் 12, 2011 12:10 AM

Google News

ADDED : அக் 12, 2011 12:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை, தேசிய விவகாரமாகக் கருத வேண்டும். இதை தமிழக பிரச்னையாக மட்டும் ஒதுக்கிவிடக் கூடாது' என்று, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம்:என் அரசு பதவியேற்றதில் இருந்து, இலங்கை அதிகாரிகளால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுதல், கொடுமைப்படுத்தப்படுதல் என, 16 சம்பவங்கள் நடந்துள்ளன.

இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது அல்லது கூலிப்படையினர் தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்கள், ஒரே மாதிரியாக நடந்துள்ளன.இந்திய மீனவர்கள் பலர், இந்த தாக்குதலால் காயமடைந்துள்ளனர். அவர்களது மீன்களை பறித்துச் செல்லுதல், மீன்பிடி வலைகளை சேதப்படுத்துதல், மீனவர்களிடம் இருக்கும் பொருட்களை பறித்துச் செல்லுதல் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. குறிப்பாக, நாகை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், இலங்கை கடற்படையினர் அல்லது கூலிப்படையினரால் தாக்கப்படுவோம் என்ற அச்சத்துடனேயே, கடலுக்குச் செல்லும் நிலை உள்ளது.இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ரஞ்சன் மத்தாய், கடந்த 8ம் தேதி என்னை சந்தித்தார். அப்போது, பல்வேறு தாக்குதல் சம்பவங்களை அவரது கவனத்துக்கு கொண்டு சென்று, இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு கூறினேன்.

மீனவர்கள் பிரச்னை மற்றும் மீனவர்கள் மீதான தாக்குதல் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து, இந்தியா-இலங்கை இடையேயான கூட்டங்களில் கலந்துகொள்ள அவர் சென்றார்.ஆனால், அதே தினத்தன்று மாலையில், இலங்கை கடற்படையினர் மீண்டும், நமது மீனவர்களை, ஆகாயத்தில் சுட்டு விரட்டியடித்துள்ளனர். மண்டபம் கடற்கரையை ஒட்டி நடந்த இந்த சம்பவம், அனைத்து பத்திரிகைகளிலும் செய்தியாக வந்துள்ளது.இந்த தொடர் தாக்குதல் சம்பவங்களுக்கு, இந்திய அரசு தனது கடுமையான ஆட்சேபனையை இலங்கை அரசிடம் தெரிவிக்க வேண்டும். பாரம்பரியமாக பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வந்த மீனவர்கள், அமைதியாக வாழ்வதற்கு வழிகாண வேண்டும்.

மேலும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை, இந்தியா மீதான இலங்கையின் தாக்குதல் என்று கருத வேண்டும். எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் மற்றும் சீனா போன்றவை நடத்தும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் போல இதையும் கருத வேண்டும்.தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீதான தாக்குதலை, தேசிய விவகாரமாக கருத வேண்டும். தமிழக பிரச்னை என்று ஒதுக்கிவிடக் கூடாது.இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.






      Dinamalar
      Follow us