sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்: சபையில் கூச்சல், குழப்பம்

/

தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்: சபையில் கூச்சல், குழப்பம்

தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்: சபையில் கூச்சல், குழப்பம்

தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்: சபையில் கூச்சல், குழப்பம்


ADDED : செப் 05, 2011 07:06 PM

Google News

ADDED : செப் 05, 2011 07:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சட்டசபையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தி.மு.க.,வினர் ஆக்கிரமித்த சொத்துக்கள் பற்றிய விவரங்கள் குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது, அ.தி.மு.க., உறுப்பினர் அ.தி.மு.க., உறுப்பினர் வெற்றிவேல் பேசியபோது, தி.மு.க., உறுப்பினர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.வெற்றிவேல் பேசிக் கொண்டிருந்த போது, சட்டசபை தி.மு.க., துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து, பேசுவதற்கு அனுமதி கேட்டார்.

அதற்கு சபாநாயகர் ஜெயகுமார், ''வெற்றிவேல் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசுகிறார். அவர் பேசி முடித்ததும், அமைச்சர் பதிலளித்த பின் உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம். எனவே உங்கள் இருக்கையில் அமருங்கள்,'' என்றார்.உடனே, துரைமுருகன் உட்பட தி.மு.க., உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து, கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் முனுசாமியும் எழுந்து, பதிலளிக்க அனுமதி கேட்டார். அவருக்கு அனுமதி அளித்து, அவர் பேசத் துவங்கியதும், தி.மு.க., உறுப்பினர்கள் தொடர்ந்து ஆட்சேபனை தெரிவித்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க., உறுப்பினர்கள் அனைவரும், தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால், சபையில் சிறிது நேரம் கூச்சல், குழப்பம் நிலவியது. சபையில் பேசுவதற்கு அனுமதி அளிக்காததை கண்டித்து, தி.மு.க., உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இச்சம்பவம் சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்தியது.வெளிநடப்பு செய்த பின்னர் பின்னர் சட்டசபைக்கு வெளியே தி.மு.க., துணைத் தலைவர் துரைமுருகன் கூறுகையில்,''சட்டசபைக்கு மக்கள் பிரச்னையை பேச வருகிறோம். ஆனால், நாங்கள் சபையில் இருப்பதையே அவர்கள் விரும்பவில்லை,'' என்றார்.








      Dinamalar
      Follow us