sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சஞ்சீவ் பட்டிற்கு ஜாமின் கிடைக்குமா? :மத்திய அரசும் பாதுகாப்பு தருகிறது

/

சஞ்சீவ் பட்டிற்கு ஜாமின் கிடைக்குமா? :மத்திய அரசும் பாதுகாப்பு தருகிறது

சஞ்சீவ் பட்டிற்கு ஜாமின் கிடைக்குமா? :மத்திய அரசும் பாதுகாப்பு தருகிறது

சஞ்சீவ் பட்டிற்கு ஜாமின் கிடைக்குமா? :மத்திய அரசும் பாதுகாப்பு தருகிறது


ADDED : அக் 04, 2011 11:18 PM

Google News

ADDED : அக் 04, 2011 11:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆமதாபாத் : குஜராத்தில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.பி.எஸ்., அதிகாரி சஞ்சீவ் பட்டின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு, வரும் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில், 2002ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, முதல்வர் நரேந்திர மோடி, போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி, 'கலவரத்தை அடக்க வேண்டாம். இந்துக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கட்டும்' எனக் கூறியதாக, ஐ.பி.எஸ்., அதிகாரி சஞ்சீவ் பட் தெரிவித்திருந்தார். ஆனால், முதல்வர் கூட்டிய கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொள்ளவில்லை என, போலீஸ் கமிஷனர் தெரிவித்திருந்தார். முதல்வர் கூட்டத்தில் தான் கலந்து கொண்டதற்கு, கான்ஸ்டபிள் கே.டி.பந்த் சாட்சி என, சஞ்சீவ் பட் தெரிவித்திருந்தார். ஆனால், முதல்வர் கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறும் படி சஞ்சீவ் பட் என்னை மிரட்டி எழுதி வாங்கினார் என, கே.டி.பந்த் சமீபத்தில் தெரிவித்தார். இதையடுத்து, சஞ்சீவ் பட் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். சஞ்சீவ் பட் தற்போது சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



சஞ்சீவ் பட் ஜாமின் மனுவை நீதிபதி ஜி.என்.பாட்டீல் விசாரித்தார். 'சஞ்சீவ் பட் ஜாமின் மனுவை மறுபரிசீலனை செய்யக்கோரும் அரசின் நடவடிக்கை சரியானதல்ல. இது, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரானது' என, சஞ்சீவ் பட்டின் வழக்கறிஞர் வாதாடினார். அரசு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, இம்மனு மீதான தீர்ப்பை, 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். சஞ்சீவ் பட்டை போலீஸ் காவலில் வைத்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும், என அவரது மனைவி உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.



இதையடுத்து சஞ்சீவ் பட்டுக்கு சிறையில் போதிய பாதுகாப்பு அளிக்கும் படி குஜராத் அரசை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது. அதுமட்டுமல்லாது சஞ்சீவ் பட்டுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து ஆராயவும் உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.








      Dinamalar
      Follow us