sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மோடி - தனியே தன்னந்தனியே

/

மோடி - தனியே தன்னந்தனியே

மோடி - தனியே தன்னந்தனியே

மோடி - தனியே தன்னந்தனியே


UPDATED : அக் 09, 2011 12:45 AM

ADDED : அக் 08, 2011 07:35 PM

Google News

UPDATED : அக் 09, 2011 12:45 AM ADDED : அக் 08, 2011 07:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, சமீபத்தில் உண்ணாவிரதம் இருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த உண்ணாவிரதம், கட்சி மேலிட தலைவர்களின் ஒப்புதலைப் பெறாமல், திடீரென அறிவிக்கப்பட்டது. இதனால், அத்வானி உட்பட பல தலைவர்கள் வருத்தப்பட்டாலும், வேறு வழியில்லாமல், மோடியின் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். தன்னை பிரதமர் வேட்பாளராகக் காட்டிக் கொள்ளத் தான், இந்த உண்ணாவிரதம் என, எதிர்க்கட்சிகளோடு பா.ஜ., தலைவர்களும் பேசிக் கொண்டனர்.தற்போது, மோடி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். டில்லி தலைவர்கள் யாருடனும் அதிகம் பேசுவதில்லை. அத்வானி, அருண் ஜெட்லி உட்பட சீனியர் தலைவர்கள், மோடியோடு போனில் தொடர்பு கொள்ள, அவர்களோடு பேச மறுத்துவிட்டாராம் மோடி. இது கட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஏன் இப்படி மாறிவிட்டார் மோடி? கட்சிக்குள் சொல்லப்படும் காரணம் இது தான். ஊழலை எதிர்த்து அத்வானி யாத்திரை மேற்கொள்ளவிருக்கிறார். அக்., 11ம் தேதி ஆரம்பிக்கும் இந்த யாத்திரை, பீகாரில் துவங்குகிறது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார், யாத்திரையை கொடியசைத்து துவக்கி வைக்கிறார். இது மோடிக்குப் பிடிக்கவில்லை. பீகார் சட்டசபை தேர்தலில் மோடியை அழைக்கக் கூடாது என, கண்டிஷன் போட்டவர் நிதிஷ்குமார். அத்தோடு, மோடியை விமர்சித்துக் கொண்டிருக்கும், பா.ஜ.,வின் கூட்டணிக் கட்சியைச் சார்ந்த நிதிஷ்குமார், எதற்கு யாத்திரையைத் தொடக்கி வைக்க வேண்டும். தன்னை அழைத்திருக்கலாமே என்பது மோடியின் விருப்பம்.அடுத்ததாக, கட்சிக்குள் மோடிக்கு வேண்டாதவர் சஞ்சய் ஜோஷி. இவரை உ.பி., தேர்தல் பணிக்கு நியமித்துள்ளார் கட்காரி. இப்படி, தனக்கு எதிராக வேலைகள் நடப்பது, தான் முக்கிய பொறுப்பில் டில்லிக்கு வருவதைத் தடுக்க, பா.ஜ., தலைவர்கள் ஒன்று சேர்ந்துள்ளது ஆகியவை, மோடியை கட்சியில் தனிமைப்படுத்தியுள்ளன.



கலக்கத்தில் காங்கிரஸ் தலைவர்கள்

'2ஜி' விவகாரத்தில், பிரதமர் அலுவலகத்திற்கு நிதி அமைச்சகம் எழுதிய நோட், பெரும் பிரச்னையைக் கிளப்பியது. '2ஜி' ஊழலை சிதம்பரம் தடுத்திருக்கலாம் என, பிரணாப் முகர்ஜியின் அமைச்சக நோட் தெரிவித்திருந்தது. இதையடுத்து, சிதம்பரம் மற்றும் முகர்ஜிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு, கடைசியில் அனைவரும் போட்டோவிற்கு 'போஸ்' கொடுத்து, விவகாரத்தை முடித்து வைத்தனர்.ஆனால், உண்மையில் விவகாரம் முடிந்த மாதிரி தெரியவில்லை என்கின்றனர் காங்கிரசார். இந்த இரு அமைச்சர்களுக்கு இடையே பல நாட்கள் தொடர்ந்த இந்த பிரச்னை, மக்கள் மத்தியில் காங்கிரசுக்கு பெரும் கெட்ட பெயரைத் தேடித் தந்துவிட்டது என கூறுகின்றனர், காங்கிரஸ் சீனியர் தலைவர்கள்.சுப்ரீம் கோர்ட்டில், சிதம்பரத்திற்கு எதிராக சுப்பிரமணியசாமியின் வாதம், இந்த நோட் குறித்து பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கடுமையான விமர்சனம், மீடியாவில் தினமும் இது தொடர்பான செய்திகள் என, அனைத்தும் மக்கள் மனதில் பதிந்துவிட்டன. இந்த ஊழலில், காங்கிரசுக்கு ஏதோ தொடர்பு உள்ளது என, மக்கள் பேசிக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். இது எங்கே போய் முடியுமோ? என, நொந்து போயுள்ளனர் காங்கிரசார். இதற்கிடையே டில்லியில், சில வதந்திகளும் உலா வருகின்றன. அடுத்த வருட துவக்கத்தில், பஞ்சாப் மாநில தேர்தல் நடைபெற உள்ளது. அது முடிந்ததும், பிரதமர் மன்மோகன் சிங் மாற்றப்படுவார், தற்போது சபாநாயகராக உள்ள மீரா குமார் பிரதமராகலாம் என்பது தான் அந்த வதந்தி. இரண்டாவது பெண் பிரதமர் என்பதோடு, ஒரு தலித் என்பதும் மீராவின் தகுதிகள்.



பிரதமர் நிகழ்ச்சியில் புதிய விதிமுறைகள்

பிரதமர் மன்மோகன் சிங், சமீபத்தில் மும்பை சென்றிருந்தார். அங்கு, கப்பல் கார்ப்பரேஷன் அமைப்பின் 50வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். விழா துவங்கியதும், மேடையில் அமர்ந்திருந்த பிரதமரை, கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் குத்துவிளக்கு ஏற்ற அழைத்தார்.விளக்கருகே வந்த பிரதமர், மெழுகுவர்த்தி எங்கே என தேட, வாசன் குத்துவிளக்கிற்கு அருகே உள்ள சுவிட்சை காட்டி, 'இதை அழுத்துங்கள் விளக்கு எரியும்' என்றார். மெழுகுவர்த்தியால் விளக்கு ஏற்றி பழக்கப்பட்ட பிரதமர், ஆச்சர்யத்துடன் சுவிட்ச்சை அழுத்தினார். குத்துவிளக்கில் அமைக்கப்பட்ட எலக்ட்ரிக் விளக்குகள்,'பளீர்' என, எரிய ஆரம்பித்தன.இந்த குத்துவிளக்கு, பேட்டரியால் இயங்கக் கூடியது; மின்சாரத்தால் அல்ல. என்னாயிற்று மெழுகுவர்த்திக்கு? விளக்கு ஏற்றும் போது, பிரதமர் கை தவறி மெழுகுவர்த்தி கீழே விழுந்தால், அவருடைய உடை தீப்பற்றிக் கொள்ளும். தவிர, மற்ற பிரச்னைகளும் ஏற்படும் என்பதால், மெழுகுவர்த்தி வேண்டாம் என, பிரதமரின் செக்யூரிட்டியினர் முடிவெடுத்துள்ளனர். அதனால் தான், பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில், எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம், இந்த பேட்டரி குத்துவிளக்கு வைக்கப்படுகிறது.



பிடிவாதமான அமைச்சர்

பிரதமர் தலைமையில், வாரத்திற்கு ஒரு முறை மத்திய அமைச்சரவைக் கூட்டம், டில்லியில் நடைபெறும். இதில், காபினட் அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள். இணை அமைச்சர்கள் கலந்து கொள்ளக் கூடாது. சில துறைகளில், காபினட் அமைச்சர்கள் இல்லாமல், இணை அமைச்சர்களே தனிப்பொறுப்பு வகிக்கின்றனர். இவர்கள், துறை சம்பந்தமாக காபினட்டில் ஏதாவது முடிவு எடுக்கும் போது மட்டுமே, இந்த இணை அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள். அவர்களுடைய துறை விவகாரம் முடிந்தவுடன், கூட்டத்திலிருந்து இந்த அமைச்சர்கள் வெளியேற வேண்டும்என்பது தான் விதிமுறை.ஒரு மத்திய இணை அமைச்சர், இந்த விதியை மதிப்பதே இல்லை. உங்களுடைய துறையின் விவாதம் முடிந்து விட்டது. நீங்கள் கிளம்பலாம் என, காபினட் செகரட்ரியேட்டின் சீனியர் அதிகாரி, இந்த அமைச்சருக்கு சொன்னால் கூட, இவர் தொடர்ந்து கூட்டத்திலேயே அமர்ந்து கொள்கிறார். பிரதமரும், எதுவும் சொல்லாமல் மவுனமாக இருக்கிறார். மற்ற சீனியர் காபினட் அமைச்சர்கள், இதை நிருபர்களிடம் சொல்லி வருத்தப்படுகின்றனர்.








      Dinamalar
      Follow us