ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா கந்தூரி விழா செப்., 29ல் துவக்கம்
ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா கந்தூரி விழா செப்., 29ல் துவக்கம்
ADDED : செப் 17, 2011 11:23 PM
கீழக்கரை: 'ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில், சந்தனக்கூடு திருவிழா, வரும் 29ம் தேதி துவங்க உள்ளது' என, தர்கா நிர்வாக அலுவலர் சிராஜ்தீன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ஏர்வாடியில் பாதுஷா நாயகம் தர்கா உள்ளது.
மகான் குத்பு அக்தாப் சுல்த்தான் ஸய்யீது இபுராகிம் ஷகீது ஒலியுல்லாஹ் நினைவு நாளை, கந்தூரி விழாவாக கொண்டாடுகின்றனர். சந்தனக்கூடு எடுத்து ஆண்டுதோறும், இந்து - முஸ்லிம் மக்கள் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக வழிபாடு நடத்துகின்றனர். இந்த விழா, வரும் 29ம் தேதி மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்ட பின் துவங்குகிறது. தொடர்ந்து 30 நாட்கள் நடக்கும் விழாவில், ஒவ்வொரு இரவிலிலும் தர்கா ஹக்தார்கள் மவுலீது ஓதுவர். அக்., 2ல் கொடியேற்றப்பட்டு, 20ல் சந்தனக்கூடு திருவிழா நடக்கிறது. 28ம் தேதி கொடியிறக்கப்பட்டு அனைவருக்கும் நேர்ச்சிகள் வழங்கப்படும், என்றார்.