ADDED : செப் 09, 2011 09:18 AM
செங்கல்பட்டு: லாரி பைக்கில் சென்றவர் பலியானார்.
ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரியை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் ரகு. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் செங்கல்பட்டு மகேந்திரபுரத்தைச் சேர்ந்த தங்கராஜ் வந்து கொண்டிருந்த பைக்கில் லிப்ட் கேட்டு பின்னால் அமர்ந்து சென்றார். பைக் புன்னவாயக்கல் அருகே வந்த போது பின்னால் வந்த லாரி மோதியதில் உடல் சிதைந்து போன நிலையில் ரகு பலியானார். தங்கராஜ் காயமடைந்தார். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் அங்கு வந்த லாரி உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். சம்பவ இடத்திற்கு ஆர்.டிஓ. செல்லப்பா, டி.எஸ்.பி. மனோகரன் ஆகியோர் விரைந்துள்ளனர். அப்பகுதியி்ல் பதட்டம் நிலவுகிறது.