ADDED : செப் 16, 2011 05:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம் அருகே சித்தேரி அருகே நடந்த ரயில் விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நடந்த இடத்தை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மிட்டல் நேரில் ஆய்வு செய்தார். மேலும் விபத்தை நேரில் பார்த்தவர்களிடமும் மிட்டல் விசாரணை நடத்தினார். நிலைய மேலாளர், சிக்னல் ஆபரேட்டர் , பராமரிப்பு அலுவலர்ஆகியோரிடமும் மிட்டல் விசாரணை நடத்த உள்ளார். இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ரயில்வே டிரைவர் ராஜ்குமாரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையை இன்னும் 10 நாட்களில் மிட்டல் தாக்கல் செய்ய உள்ளார்.