அரசு அதிகாரி இடமாற்றத்தை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை
அரசு அதிகாரி இடமாற்றத்தை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை
UPDATED : செப் 21, 2011 02:47 PM
ADDED : செப் 21, 2011 01:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகை: இடமாற்றம் செய்யப்பட்ட அரசு திட்ட அதிகாரியை மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்த கோரி , மகளிர் சுய உதவிக்குழுவினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் திட்ட ஒருங்கிணைப்பாளராக அறிவுநிதி என்ற பெண் அதிகாரி பணியாற்றி வந்தார். இவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். அரசியல் காரணங்களால் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஈயத்தாங்கல், கட்டுமாடிபகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் , ஒருங்கிணைப்பாளரை மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்தக்கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.