ADDED : ஜூலை 12, 2011 08:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே பெண்ணிடம் தாலி சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த பாலப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி தங்கம்மாள். நேற்றிரவு இருவரும் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த போது, பைக்கில் வந்த இருவர், தங்கம்மாள் கழுத்தில் இருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துச்சென்றனர். இது தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

