பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டு செல்லும்:இலவசத்துக்கும் வாய்ப்பு
பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டு செல்லும்:இலவசத்துக்கும் வாய்ப்பு
ADDED : ஜூலை 15, 2011 04:27 AM
விருதுநகர்:'ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காமலிருந்தால் , கார்டுகள் செல்லாது' என, கடந்த அரசு தெரிவித்திருந்த நிலையில், 'பொருட்கள் வாங்கா விட்டாலும் கார்டுகள் செல்லும்; அனைத்து இலவச பொருட்களும் வழங்கப்படும்' என, புதிய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், தொடர்ந்து கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டும்.
இல்லையெனில், கார்டுகள் செல்லாது என, கடந்த அரசு நடவடிக்கை எடுத்தது. பல கார்டுகள் பயன்பாட்டில் இல்லை என கூறி, ரத்து செய்யப்பட்டன. இதில், உண்மையான ரேஷன் கார்டுதாரர்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது, ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காவிட்டாலும், கார்டு செல்லுபடியாகும் என, பொதுமக்களுக்கு அரசால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.மேலும், ரேஷன் கார்டுதாரர்கள் இலவச அரிசி வாங்கினால் தான், இலவச பொருட்களான மிக்சி, கிரைண்டர், பேன் கிடைக்கும் என, வதந்தியை கிளப்பி விடுவதால், ரேஷன் கார்டுகள் வைத்துள்ள அனைவருக்கும், இலவச பொருட்கள் வழங்கப்படும் எனவும், அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைத்து மாவட்ட வழங்கல் அதிகாரிகளையும், அரசு அறிவுறுத்தியுள்ளது.