ADDED : ஜூலை 17, 2011 08:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனைமரத்துப்பட்டி: சேலம் அருகே கொங்கு இளைஞர் பேரவையின் ஒன்றிய செயலாளரின் கார் தீ வைத்து எரிக்கப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மல்லூர் போலீஸ் சரகம் கிழக்குகாடு பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவர் பனைமரத்துப்பட்டி ஒன்றிய கொ.இ.பேரவை செயலர். இவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா சபாரி காரை மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து விட்டு சென்று விட்டனர். இதில் கார் பின்பகுதி முழுவதும் எரிந்து சாம்பலானது. அரசியல் ரீதியான முன்விரோதம் காரணமாக யாரும் தீ வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.