sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இரண்டரை மாதங்களுக்கு தேவையான அரிசி, கோதுமை கையிருப்பு

/

இரண்டரை மாதங்களுக்கு தேவையான அரிசி, கோதுமை கையிருப்பு

இரண்டரை மாதங்களுக்கு தேவையான அரிசி, கோதுமை கையிருப்பு

இரண்டரை மாதங்களுக்கு தேவையான அரிசி, கோதுமை கையிருப்பு


ADDED : ஆக 19, 2011 11:03 PM

Google News

ADDED : ஆக 19, 2011 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அடுத்த இரண்டரை மாதங்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை தமிழக அரசிடம் கையிருப்பாக உள்ளது.உணவுத் துறைக்கான கொள்கைக் குறிப்பில், இதுபற்றிக் கூறப்பட்டுள்ளதாவது:பொது வினியோகத் திட்டத்தின் கீழ், அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவையும், சிறப்பு பொது வினியோகத் திட்டத்தின் கீழ், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு ஆகியன வழங்கப்படுகின்றன.இந்திய உணவுக் கழகம் மூலம், மத்தியத் தொகுப்பில் இருந்து மாநிலத்துக்கு அரிசி ஒதுக்கப்படுகிறது.

தற்போதைய நிலையில், அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ், கிலோ 3 ரூபாய்க்கு, 65 ஆயிரத்து 262 டன் அரிசியும், வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கென, கிலோ 5.65 ரூபாய்க்கு, ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 936 டன்னும், வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு, 8.30 ரூபாய் வீதம் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 255 டன்னும் வழங்கப்படுகின்றன.இவற்றை, விலை பாகுபாடின்றி, அனைவருக்கும் இலவசமாக தமிழக அரசு வழங்குகிறது. தமிழகத்தின் தற்போதைய மாதாந்திர அரிசித் தேவை, 3.82 லட்சம் மெட்ரிக் டன்கள். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மத்திய அரசின் சார்பாகக் கொள்முதல் செய்யும் நெல் முழுவதையும் அரவை செய்து, மத்தியத் தொகுப்பில் ஈடுகட்டி, பொது வினியோகத் திட்டத்தில் அரசு பயன்படுத்துகிறது.

பொது வினியோகத் திட்டத்தின் கீழ், மாதாந்திர அரிசி விற்பனை, 3.17 லட்சம் மெட்ரிக் டன்கள். ஆனால், கடந்த ஜூன் மாதத்தில், இது 3.46 லட்சம் மெட்ரிக் டன்களாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் அளவை விட, மாதந்தோறும் கூடுதலாகத் தேவைப்படும் அரிசி, 30 ஆயிரம் மெட்ரிக் டன். இது, அவ்வப்போது மத்திய அரசு வழங்கும், தற்காலிக ஒதுக்கீட்டில் இருந்து ஈடு செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு ஜூலை 31ம் தேதி நிலவரப்படி, 8 லட்சத்து 55 ஆயிரத்து 730 மெட்ரிக் டன் அரிசி, தற்போது இருப்பு உள்ளது. இது, இரண்டரை மாதத் தேவைக்குப் போதுமானது.

இதேபோல, மாதந்தோறும் பல்வேறு ஒதுக்கீடுகளின் கீழ், 15 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்குகிறது. கடந்த ஜூலை 31ம் தேதி நிலவரப்படி, கோதுமை கையிருப்பு 40 ஆயிரத்து 273 மெட்ரிக் டன்கள். இது, இரண்டு மாதத் தேவைக்குப் போதுமானது.

கோதுமை தவிர, மானிய விலையில் செறிவூட்டப்பட்ட கோதுமை மாவை, கிலோ 11 ரூபாய்க்கு அரசு வழங்குகிறது. மாதாந்திர கோதுமை மாவு நுகர்வு, 4,063 மெட்ரிக் டன்.

சர்க்கரையைப் பொறுத்தவரை, மத்திய அரசின் மாதாந்திர லெவி சர்க்கரை ஒதுக்கீடு, 10 ஆயிரத்து 833 மெட்ரிக் டன்கள். இது போதுமானதாக இல்லாததால், லெவி அல்லாத சர்க்கரையை, வெளிச் சந்தையில் அரசு கொள்முதல் செய்கிறது. மாதந்தோறும் அட்டைதாரர்களுக்கு, 34 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் சர்க்கரை வினியோகிக்கப்படுகிறது.

தமிழகத்தில், மொத்தம் ஒரு கோடியே 97 லட்சத்து 36 ஆயிரத்து 525 ரேஷன் கார்டுகள் உள்ளன.இந்த ஆண்டு ஜூலை 31ம் தேதிப்படி, தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுகள் எண்ணிக்கை:குடும்ப அட்டைகளின் வகை தகுதியான பொருட்கள் குடும்ப அட்டைகள் எண்ணிக்கைபச்சை நிற அட்டைகள் (அரிசி விருப்பம்) அனைத்துப் பொருட்கள் 18,53,13,983

வெள்ளை நிற அட்டைகள் (சர்க்கரை விருப்பம்) அரிசி தவிர அனைத்துப் பொருட்கள் 10,82,659காக்கி நிற அட்டைகள் (போலீசார்) அனைத்துப் பொருட்கள் 61,336

எப்பொருளும் வேண்டா அட்டைகள் (வெள்ளை நிறம்) எப்பொருளும் வாங்க முடியாது 60,547






      Dinamalar
      Follow us