sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 08, 2026 ,தை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வெடிகுண்டு மிரட்டல்: மாஜி அரசு ஊழியர் கைது

/

வெடிகுண்டு மிரட்டல்: மாஜி அரசு ஊழியர் கைது

வெடிகுண்டு மிரட்டல்: மாஜி அரசு ஊழியர் கைது

வெடிகுண்டு மிரட்டல்: மாஜி அரசு ஊழியர் கைது


ADDED : ஆக 20, 2011 05:22 AM

Google News

ADDED : ஆக 20, 2011 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் பெயரில், பொய் தந்தி கொடுத்ததுடன், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த, 'டிஸ்மிஸ்' ஊழியரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னை, அரசினர் தோட்டம், அரசு அலுவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ரத்தினசபாபதி; ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான இவர், தற்போது டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினராக உள்ளார். இவரது மனைவி சக்தி சபாபதி. ரத்தினசபாபதிக்கும், கோவை அலமு நகர் குடியிருப்பில் வசித்து வந்த, நகரமைப்பு அலுவலராக இருந்து, பணி நீக்கம் செய்யப்பட்ட தங்கவேலு என்பவருக்கும் இடையில் பிரச்னை இருந்து, கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி சென்னை வந்த தங்கவேலு, அலமு நகரில் உள்ள பாலசுப்ரமணியம் என்பவரை தொடர்பு கொண்டு, ரத்தினசபாபதி போல் ஆள்மாறாட்டம் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அத்துடன், அவர் பெயரை பயன்படுத்தி சென்னையில் இருந்து சக்தி ரேவதி, மோகன்ராஜ், நந்தினி சிங் ஆகியோரை குறித்து அவதூறாக, ஆடிட்டர் பரமசிவம் என்பவருக்கு தந்தி அனுப்பியுள்ளார். இது தொடர்பாக, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம், ரத்தினசபாபதியின் மனைவி சக்தி சபாபதி புகார் அளித்தார்.புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதியப்பட்டு, துணை கமிஷனர் ராதிகா மேற்பார்வையில், உதவி கமிஷனர் வேதரத்தினம் தலைமையில் தனிப்படைபோலீசார் தங்கவேலுவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us