கணவருடன் செல்ல மறுத்தமனைவியால் திருப்பம்:ஐகோர்ட் கிளை உத்தரவு
கணவருடன் செல்ல மறுத்தமனைவியால் திருப்பம்:ஐகோர்ட் கிளை உத்தரவு
ADDED : ஆக 23, 2011 04:54 AM
மதுரை:கடத்தல் வழக்கில் 20 நாள் கைக்குழந்தையுடன் ஆஜரான பெண், கணவருடன் செல்ல மறுத்ததால், ஐகோர்ட் கிளையில் ஹேபியஸ் கார்பஸ் மனு விசாரணையில் திருப்பம் ஏற்பட்டது.கரூர் வடகுபட்டியை சேர்ந்த மூர்த்தி, 28, தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு:
எனக்கும், சகோதரி மகள் கவிதா, 27,வுக்கும் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கூட்டுறவு பால் சொசைட்டியில் பணிபுரிகிறேன். கடந்த செப்., 9ல் வேலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய போது, மனைவியை காணவில்லை. அவரை பக்கத்து வீட்டை சேர்ந்த ஜீவா கடத்தியது தெரிய வந்தது. மனைவியை கண்டுபிடித்து ஆஜர்படுத்த வேண்டும், என்றார்.
மனு நீதிபதிகள் ஜனார்த்தனராஜா, அருணாஜெகதீசன் முன் விசாரணைக்கு வந்தது. கவிதா, கைக்குழந்தையுடன் ஆஜரானார். மனுதாரரும் ஆஜரானார். கணவருடன் செல்ல கவிதா மறுத்து விட்டார். இதுகுறித்து அரசு வக்கீல் சி.ரமேஷிடம் நீதிபதிகள் விசாரித்தனர். பின், மனு மீது உத்தரவிட வேண்டி, விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தனர்.