sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 03, 2026 ,தை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

துபாய் செல்லும் தேங்காய் மட்டை தூள் கேக்

/

துபாய் செல்லும் தேங்காய் மட்டை தூள் கேக்

துபாய் செல்லும் தேங்காய் மட்டை தூள் கேக்

துபாய் செல்லும் தேங்காய் மட்டை தூள் கேக்


ADDED : ஆக 27, 2011 11:44 PM

Google News

ADDED : ஆக 27, 2011 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கழிவைக் கூட காசாக்கலாம் என்பதை நிரூபிக்கின்றனர், சோழவந்தான் முள்ளிப்பள்ளம் தென்னை விவசாயிகள். தேங்காய் உரித்த பின், வீணாகும் மட்டைகளை மிஷினில் தூளாக்குகின்றனர். அந்த தூள்களை தனியாகவும், நார்களை (மஞ்சுகளை) தனியாகவும் பிரிக்கின்றனர். மிகவும் பொடியான தூள்களை, கோழி வளர்க்கும் இடங்களில் வெப்பம் தாக்காமல் இருக்கவும், தூள் மற்றும் சிறு நார் கலந்தவற்றை, 'தேங்காய் மட்டை கேக்' தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.

சோழவந்தான் பகுதியில் தேங்காய் விளைச்சல் அதிகம். தேங்காயை உரித்து நார் எடுத்த பின், அதில் கிடைக்கும் தூள்கள் யாருக்கும் பயன்படாமல் இருந்தது. வீணாகக் கிடந்த அந்த தூள்களை வைகை கரையோரம் கொட்டி, மாசுபடுத்தினர். ஆற்றில் வெள்ளம் வரும் போது, 50 ஆட்களை கூலிக்கு நியமித்து, ஆற்றிற்குள் அந்த தூள்களை தள்ளினர். இது ஆற்று நீரை மாசுபடுத்துகிறது என, சில ஆண்டுகளுக்கு முன் பிரச்னை ஏற்பட்டது. தற்போது இந்த தென்னங்கழிவு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருளாகிவிட்டது.

முள்ளிப்பள்ளம் பூபதி மாணிக்கம் தொழிற்சாலையில், 10 சதவீத நாருடன் உள்ள தேங்காய் மட்டை தூள்களில் தண்ணீர் குழாய் மூலம் அடித்து, அதில் உள்ள உப்புச்சத்தை குறைக்கின்றனர். பின் அதை பதப்படுத்தி காய வைத்து பெரிய நார்களை அகற்றிவிட்டு, அத்தூளில் 10 சதவீத நார்கள் மட்டும் இருக்கும்படி செய்கின்றனர். அதை 'டை' மிஷின் மூலம் 2 அடி நீள, அகலத்தில் கேக்குகளாக தயாரிக்கின்றனர்.

தொழிலாளி வீராசாமி கூறுகையில், ''ஒரு லாரி மட்டை தூளை 2,500 ரூபாய் வரை வாங்குகிறோம். அதிலிருந்து தயாராகும் ஒரு கேக், 5 கிலோ எடையுடையது. இதை, 25 முதல் 28 ரூபாய் வரை விலைக்கு விற்கிறோம். வெயில் காலத்தில் ஒரு நாளைக்கு 2 டன் கேக், மழைக் காலத்தில் ஒன்றரை டன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு கேக், 70 லிட்டர் தண்ணீரை உறிஞ்சும். பாலைவனங்களில் பயிர் செய்வோர் வாங்கிச் செல்கின்றனர்.

''இவை துபாய்க்கு அதிகம் செல்கிறது. துபாயில் காய்கறி பயிரிடுவோர், செடியின் அடிப்பாகத்தில் தண்ணீரில் ஊற வைத்த இந்த நார் கேக்கை போடுவர். இதனால், செடியின் வேர்ப்பகுதி எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும். இந்த கேக்கை உபயோகப்படுத்துவதால், 20 சதவீதம் விளைச்சல் அதிகமாக இருக்கும். இங்கிருந்து மட்டும் மாதம், 50 டன் கேக்குகளை துபாய், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறோம். மழைக் காலங்களில் 15 முதல் 20 டன் வரை என உற்பத்தி குறைகிறது,'' என்றார்.-நமது சிறப்பு நிருபர்-






      Dinamalar
      Follow us