ADDED : செப் 05, 2011 11:46 AM
கீழக்கரை: கீழக்கரை அருகே மண் சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார்.
மேலும் மூவர் காயமடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி அருகே மாரிவலசைபகுதியில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கால்வாய் அகலப்படுத்தும்பணி நடந்து கொண்டிருந்தது. இதில் 80-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மண் சரிந்ததில் பள்ளத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த வெள்ளையன்வலசையைச் சேர்ந்த பாண்டியம்மாள் (25), மாரிவலசையைச் சேர்ந்த பிரபா (35), கருப்பாயி (55), கோசலா (30) ஆகியோர் மண்ணில் புதையுண்டனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில் வெள்ளையன்வலசையைச் சேர்ந்த பாண்டியம்மாள் (25) சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் 3 பெண்களும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

