sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வங்கதேசத்துடன் வரிச்சலுகை ஒப்பந்தம்:மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு கடிதம்

/

வங்கதேசத்துடன் வரிச்சலுகை ஒப்பந்தம்:மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு கடிதம்

வங்கதேசத்துடன் வரிச்சலுகை ஒப்பந்தம்:மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு கடிதம்

வங்கதேசத்துடன் வரிச்சலுகை ஒப்பந்தம்:மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு கடிதம்


ADDED : செப் 06, 2011 02:20 AM

Google News

ADDED : செப் 06, 2011 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:'உள்நாட்டு ஜவுளி வர்த்தகம் பாதிக்கும் அபாயம் இருப்பதால், வங்கதேசத்தில் இருந்து ஜவுளி இறக்குமதி செய்ய வரியில்லா தெற்கு ஆசிய வர்த்தக ஒப்பந்தத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதம்:வரியில்லா தெற்கு ஆசிய வர்த்தக ஒப்பந்தத்தில் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் 48 வகையான ஜவுளிப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது, திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு, இது அமல்படுத்தப்பட்டால், உள்நாட்டு ஜவுளித் தொழில் வர்த்தகம் பாதிக்கும் அபாயம் உள்ளது.



கடந்த 2010-11ம் நிதியாண்டில், இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் 50 ஆயிரத்து 220 கோடி ரூபாய் அளவுக்கும், அதே கால கட்டத்தில், வங்கதேசத்தில் ஏற்றுமதி வர்த்தகம் 67 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கும் நடந்துள்ளது. அந்நாட்டு அரசு வழங்கும் சலுகைகள், மூலப்பொருட்கள் சலுகை விலையில் கிடைப்பது, நிறுவனங்களின் உற்பத்திச் செலவைக் குறைக்கிறது.வங்கதேசத்தில் இருந்து நம் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 48 வகையான ஜவுளிப் பொருட்களுக்கு வரிச்சலுகை வழங்கும் ஒப்பந்தம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு பஞ்சு, நூல் உள்ளிட்டவை இறக்குமதி செய்வதிலும் வரி விலக்கு அளிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.



இதன் மூலமாக, நம் நாட்டில் இருந்து ஜவுளி உற்பத்திக்கான மூலப்பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கும். இந்த ஒப்பந்தம், அந்நாட்டு ஜவுளித் தொழிலை மேலும் பலப்படுத்தும். இத்தகைய ஒப்பந்தத்தால், வங்கதேசத்துக்கு மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதிலும், அந்நாட்டில் இருந்து ஜவுளிப் பொருட்களை இறக்குமதி செய்யவும் வரிச்சலுகை கிடைக்கிறது.இதனால், அந்நாட்டு தயாரிப்புகள், இந்திய ஏற்றுமதி சந்தையில் வரவேற்பை பெரும் பட்சத்தில், உள்நாட்டு பனியன் வர்த்தகம் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். இதை கருத்தில் கொண்டு, வரியில்லா தெற்கு ஆசிய வர்த்தக ஒப்பந்தத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சக்திவேல் தெரிவித்துள்ளார்.








      Dinamalar
      Follow us