தி.மு.க., செயலரிடம் விசாரணை:பெண் டி.எஸ்.பி., திடீர் டிரான்ஸ்பர்
தி.மு.க., செயலரிடம் விசாரணை:பெண் டி.எஸ்.பி., திடீர் டிரான்ஸ்பர்
ADDED : செப் 09, 2011 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி; தூத்துக்குடி மாவட்ட தி.மு.க., செயலரிடம் பணத்தகராறு புகாரில் விசாரணை நடத்திய பெண் டி.எஸ்.பி., திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சசிகலா.
இவர், நில அபகரிப்பு புகார்களையும் விசாரித்து வந்தார். நில விற்பனையில் ஒருவருக்கு மீதிப்பணம் தரவேண்டியது தொடர்பான புகாரில், மாவட்ட தி.மு.க., செயலர் பெரியசாமியிடம் இவர், கடந்த 5ம் தேதி விசாரித்தார். இந்நிலையில், டி.எஸ்.பி., சசிகலா நேற்று திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு சென்னை போலீஸ் தலைமையிடத்திலிருந்து, தூத்துக்குடி எஸ்.பி., அலுவலகத்திற்கு பேக்சில் வந்தது. அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணம் தெரியவில்லை.