மதுரை சிறை கண்காணிப்பாளருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
மதுரை சிறை கண்காணிப்பாளருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
ADDED : செப் 10, 2011 01:15 AM
மதுரை : அச்சுறுத்தல் காரணமாக, மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆனந்தனுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது.
இவர், ஜெயிலராக இங்கு பணிபுரிந்தபோது, கைதிகள் சிலரின் அச்சுறுத்தலுக்கு ஆளானார்.
இவருக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. கோவை சிறையில் பணிபுரிந்த போதும், இப்பாதுகாப்பு தொடர்ந்தது.பின், நெல்லை உட்பட பல சிறைகளில் பணிபுரிந்தார். அங்கு, அவருக்கு அச்சுறுத்தல் இல்லாததால், பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. சில வாரங்களுக்கு முன், பதவி உயர்வில், கண்காணிப்பாளராக மதுரையில் நியமிக்கப்பட்டார்.நேற்று முன் தினம், இந்து முன்னணி மாநிலத் தலைவர் ராஜகோபாலன் கொலை வழக்கில், நெல்லை கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதன் காரணமாகவும், சிறையில் ஏற்கனவே அச்சுறுத்தல் இருப்பதாலும், ஆனந்தனுக்கு மீண்டும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.