ADDED : செப் 10, 2011 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி :கூட்டுறவு பதிவாளர் அலுவலக அனுமதி கிடைக்காததால், பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.மாவட்டந்தோறும் சிறந்த முறையில் செயல்
படும் 10 தொடக்க விவசாய கூட்டுறவு சங்கங்களை பலநோக்கு கூட்டுறவு சங்கங்களாக மேம்படுத்தி நிதி உதவி வழங்க நபார்டு வங்கி திட்டமிட்டுள்ளது.
இதற்குரிய சங்கங்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டன. இதற்கு மாநில பதிவாளர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்து சேரவில்லை. இதனால் நபார்டு வங்கியில் இருந்து கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி உதவிகள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.