ADDED : செப் 11, 2011 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகளை வழங்கும் முன், அவற்றை சோதனையிடும் போது கையுறை அணிய அரசு உத்தரவிட்டுள்ளது.விரல் ரேகையுடன் வழங்கினால், அதை பழைய பொருட்கள் என்று நினைத்து விடக்கூடாது என்பதற்காக, பொருட்களைச் சோதனை செய்யும் போது கையுறை அணிய வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பழுதானால், 30 நாட்களில் அவற்றை திருப்பிக் கொடுத்துவிட்டு புதியதை வாங்கி கொள்ளவும், வாரண்டி காலமான இரண்டு ஆண்டிற்குள் பழுதானால், சரி செய்ய 'சர்வீஸ் சென்டர்' அமைக்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது.
பிரவுன் கலரில் மிக்சி, கிரைண்டர், நீல நிறத்தில் டேபிள் பேன் வழங்கப்பட உள்ளன.