ADDED : செப் 14, 2011 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை பெருங்குடியில் உள்ள எவரான் கல்வி நிறுவனம், வரி ஏய்ப்பு செய்ததை, கண்டுபிடித்த வருமான வரி கூடுதல் கமிஷனர் ரவீந்திரா, வரியை குறைத்து செலுத்துவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறி, புரோக்கர் உத்தம்சந்த் போரா, கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கி÷ஷார் ஆகியோரிடம் இருந்து, 50 லட்ச ரூபாயை, லஞ்சமாக பெற்றபோது மூவரையும் சி.பி.ஐ., கைது செய்தது.மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க, சென்னை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் அனுமதியளித்தது.
அதன்படி, சி.பி.ஐ., விசாரித்து விட்டு மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தியது. தங்களை ஜாமினில் விடுவிக்கக் கோரி, மூவரும் தாக்கல் செய்த மனுக்களை, நீதிபதி யூசுப் அலி தள்ளுபடி செய்தார்.