அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் தனித்து போட்டி: தங்கபாலு
அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் தனித்து போட்டி: தங்கபாலு
ADDED : செப் 16, 2011 02:38 PM
சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலுதெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ்தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருநாவுக்கரசர் இளங்கோவன் ஜே.எம்.ஆரூண், உட்பட பலர் கலந்து கொண்டனர். செப்.,18-ம் தேதி முதல் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு வேட்பு மனு விநியோகிக்கப்படும் எனவும், பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் 20-ம்தேதி ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மேயர் பதவிக்கு போட்டியிடுவோருக்கா விருப்ப மனு கட்டணம் ரூ.10 ஆயிரமும், நகராட்சி தலைவர் பதவிக்கு ரூ. 5 ஆயிரமாகவும், மாவட்ட ஊராட்சி தலைவர்பதவிக்கு ரூ.3 ஆயிரம், நகர வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆயிரம் ரூபாயாகவும் விருப்பமனு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தங்கபாலு தெரிவித்துள்ளார்.மே<லும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிடும் எனவும் தெரிவித்தார்.