கவுன்சிலர் பதவிகளுக்கான அ.தி.மு.க., அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் அறிவிப்பு
கவுன்சிலர் பதவிகளுக்கான அ.தி.மு.க., அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் அறிவிப்பு
ADDED : செப் 25, 2011 11:59 PM
சென்னை:உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சித் தலைவர், பேரூராட்சி, மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர்களுக்கு பதிலாக, அதிகாரப்பூர்வ புதிய வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு வெளியிட்டார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள புதிய வேட்பாளர் பட்டியல் விவரம்:நகராட்சித் தலைவர் வேட்பாளர்கள்:பல்லாவரம் நகராட்சி - நிசார் அகமது (நகர கழக மாவட்ட பிரதிநிதி), கடலூர் நகராட்சி - சுப்பிரமணியன் (கடலூர் தொகுதி கழக செயலர்), அரியலூர் நகராட்சி - கணேசன் (அரியலூர் தொகுதிக் கழக செயலர்), ராமேஸ்வரம் நகராட்சி - அர்ச்சுனன்(நகராட்சி முன்னாள் தலைவர்), நாரவாரிக்குப்பம் பேரூராட்சி - ரமேஷ் (பேரூராட்சி கழக பொருளாளர்), கடலூர் கிழக்கு மாவட்டம் மங்கலம்பேட்டை பேரூராட்சி - பாஸ்கர்(விருத்தாசலம் தொகுதி கழக இணை செயலர்).
விழுப்புரம் தெற்கு மாவட்டம் - தியாகதுருகம் பேரூராட்சி - விஜயா, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பேரூராட்சி - சையத் அசேன் (மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலர்), சேலம் புறநகர் மாவட்டம் தேவூர் பேரூராட்சி - செங்கோடன் (பேரூராட்சி கவுன்சிலர், அம்மாபாளையம்), தேனி மாவட்டம், மார்க்கையன்கோட்டை பேரூராட்சி - அகிலன் (வார்டு கழக மேலமைப்பு பிரதிநிதி), கன்னியாகுமரி மாவட்டம் - விலவூர் பேரூராட்சி - டெய்சி குளோரிபாய், ஏழுதேசம் பேரூராட்சி ஷிபா (மூஞ்சிறை ஒன்றிய கழக துணை செயலர்), தென்தாமரைக்குளம் பேரூராட்சி தங்கநாடார்.
சென்னை மாநகராட்சி வார்டு வேட்பாளர்கள்:17 - ரதியா ஜெய்சங்கர், 22 - உமாமகேஸ்வரி, 25 - ரேவதி, 32 - சங்கர், 52 - நாகம்மாள், 55 - டாக்டர் கிருஷ்ணா ரெட்டி, 60 -செல்லப்பன், 71 - கோவிந்தராஜ், 76 - சரோஜா, 89 - அலெக்சாண்டர், 100 - மல்லிகா, 103 - வாசுகிபவானி, 127 - மலைராஜன், 134 - மாணிக்கம், 142 - பாபு, 143 - நளினி, 144 - பாரத், 153 - லதாகுமார், 158 - ராஜசேகர், 171 - பழனி, 181 - இந்திராணி, 183 - ராஜாராம், 185 - கண்ணன், 187 - உமாதியாகராஜன், 191 - மனோகரன்.
கோவை மாநகராட்சி வார்டு வேட்பாளர்:25 - ஜெயபால், 30 - உதயகுமார், 31 - கந்தசாமி, 36 - குபேந்திரன், 49 - செந்தில்வேல், 61 - சிங்கை ஜி.வசந்தி, 67 - மலர்விழி, 70 - கணேசன், 72 - சசிரேகா, 75 - கலைவாணி, 90 - சமீனா.
மதுரை மாநகராட்சி வார்டு வேட்பாளர்:33 - முருகன், 27 - ஆதிலட்சுமி, 44 - ராஜலட்சுமி மகாதேவன், 80 கண்ணகி பாஸ்கரன்.
பட்டியலில் குளறுபடி:சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு, அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் 200 வேட்பாளர்களின் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
பட்டியலில் இடம் பெற்ற வேட்பாளர்கள் மீது, கட்சி வட்டாரத்தில் கடும் அதிருப்தி உருவாகியுள்ளது. வில்லிவாக்கம் தொகுதியில், கட்சிப் பிரமுகர் ஒருவரின் உறவினர்களுக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளது. சில வேட்பாளர்கள், 'பை-பாஸ்' ரூட்டில் சீட் பெற்றுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியும், பெயர் மாற்றி சீட் பெற்றுள்ளார். வேட்புமனுவை சரியாக பூர்த்தி செய்யாமல், கடைசி நேரத்தில் தனது மனைவியை மாற்று வேட்பாளராக நிறுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. அதேபோல, திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்டச் செயலர் ஒருவரின் மகன் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த குளறுபடி காரணமாக, வேட்பாளர்கள் பட்டியலில் திருத்தம் ஏற்படும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.