ADDED : செப் 27, 2011 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ராணுவத்தற்கு என அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட நிதியை ராணுவ அதி்காரிஒருவர் தனது மனைவிக்கு ஒதுக்கிமனைவியை அழகுபடுத்தி பார்த்துள்ளார் என புகார் கிளம்பியுள்ளது.
அசாம்படை பிரிவை சேர்ந்தவர் டைரக்டர் ஜெனரல் ராமேஸ்வர்ராவ். இவர் மத்திய அரசு இப்படை பிரிவிற்கு என ஒதுக்கிய நிதியி்ல் இருந்து சுமார்23 ஆயிரம்ரூபாய் வரையில் தனது மனைவியின் முடி அலங்காரம் , உடை அலங்காரம், பரிசு பொருட்கள் வழங்குவது என செலவழித்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழும்பியுள்ளது. குற்றச்சாட்டு உறுதிபடுத்தும்பட்சத்தில் அவர் ராணுவ கோர்ட் மூலம் விசாரணை நடத்தப்படுவார் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் ஆதர்ஷ் வீ்ட்டு வசதிவாரிய ஊழல் வழக்கு உட்பட பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி வருகி்னறனர் என்பது குறிப்பிடத்த்கது.