ADDED : செப் 28, 2011 01:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:எம்.பி.,க்களுக்கு பணம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜ்யசபா எம்.பி.,யும், சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச் செயலருமான அமர் சிங்கின் இடைக்கால ஜாமின் மனுவை டில்லி கோர்ட் இன்றுவரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச் செயலரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான அமர் சிங், 2008ல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆதரவாக ஓட்டுப் போட, எம்.பி.,க்களுக்கு பணம் கொடுத்த வழக்கில், கடந்த 6ம் தேதி டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியது. இந்நிலையில், அவரது இடைக்கால ஜாமினை இன்று வரை நீட்டித்து டில்லி கோர்ட் உத்தரவிட்டது.