ADDED : அக் 10, 2011 10:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பலூர்: பெரம்பலூரில் தனியார் பஸ் மோதி பள்ளி மாணவி ஒருவர் பலியானார்.
இதைக் கண்டித்து நடந்த சாலை மறியலில் பொதுமக்கள் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். பெரம்பலூர் சங்குப்பேட்டையச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் புவனேஸ்வரி (13). 8ம் வகுப்பு படித்து வந்த இவர், இன்று தனது தந்தையுடன் டூவீலரில் பள்ளி சென்ற போது, தனியார் பஸ் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவி இறந்த சம்பவத்தையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் மறியலை கைவிடும்படி கூறியும், அதை பொதுமக்கள் ஏற்க மறுத்ததால், லேசான தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் கருப்பையா என்ற அதிரடிப்படை வீரர் காயமடைந்தார்.

