sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓட்டுச்சீட்டு வினியோகம் தீவிரம்:மாநில தேர்தல் கமிஷன் அறிவிப்பு

/

ஓட்டுச்சீட்டு வினியோகம் தீவிரம்:மாநில தேர்தல் கமிஷன் அறிவிப்பு

ஓட்டுச்சீட்டு வினியோகம் தீவிரம்:மாநில தேர்தல் கமிஷன் அறிவிப்பு

ஓட்டுச்சீட்டு வினியோகம் தீவிரம்:மாநில தேர்தல் கமிஷன் அறிவிப்பு


ADDED : அக் 11, 2011 10:20 PM

Google News

ADDED : அக் 11, 2011 10:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஓட்டுச்சீட்டு அச்சிடும் பணிகள் முடிந்து, மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, மாநில தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கை:வரும் 17, 19ம்தேதிகளில், கிராமப்புற உள்ளாட்சி பகுதிகளில் இரண்டு கட்டமாக நடக்கும் தேர்தலில், இரண்டு கோடியே 64 லட்சத்து 46 ஆயிரத்து 625 வாக்காளர்கள் ஓட்டளிக்கவுள்ளனர். இதற்காக, 60 ஆயிரத்து 14 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு, தேர்தல் பணியில் நான்கு லட்சத்து 23 ஆயிரத்து 598 பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர். மூன்று லட்சத்து 45 ஆயிரத்து 590 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஊராட்சி தலைவருக்கு இளம் சிவப்பு, ஊராட்சி உறுப்பினருக்கு வெள்ளை அல்லது நீலம், ஒன்றிய கவுன்சிலருக்கு பச்சை, மாவட்ட கவுன்சிலருக்கு மஞ்சள் ஆகிய நிறங்களில் ஓட்டுச் சீட்டு பயன்படுத்தப்பட இருக்கிறது. தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் இருந்து, 600 மெட்ரிக் டன் காகிதம் வாங்கப்பட்டு ஓட்டுச் சீட்டுகளும், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஒட்டும் சின்னங்களும் அச்சிடப்பட்டுள்ளன. ஓட்டுச் சீட்டுகள் மிகுந்த கவனத்துடனும், பாதுகாப்புடனும் அச்சிடப்பட்டு 10ம் தேதி முதல், மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us