தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வைகையில் 'தெர்மோகூல்' அதிகாரி தூக்கி அடிப்பு?

வைகையில் 'தெர்மோகூல்' அதிகாரி தூக்கி அடிப்பு?

வைகையில் 'தெர்மோகூல்' அதிகாரி தூக்கி அடிப்பு?


UPDATED : ஏப் 24, 2017 03:33 AM

ADDED : ஏப் 24, 2017 03:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 24, 2017 03:33 AM ADDED : ஏப் 24, 2017 03:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: வைகை அணையில் தெர்மாகோலை மிதக்கவிட்டு நீர் ஆவியாவதை தடுக்கும் ‛அரிய' திட்டத்தை வகுத்த அதிகாரிக்கு டிரஸ்பர் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்., 21 ம் தேதி அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் மதுரை கலெக்டர் தலைமையில் வைகை அணையில் தண்ணீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோலை மிதக்கவிட்ட கூத்து நடந்தது. இந்த ‛அரிய' திட்டத்தை வகுத்த அதிகாரி மதுரை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் என கூறப்படுகிறது.

இந்நிலையில் மதுரை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் சிறப்பு திட்ட கோட்டப் பிரிவிற்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக அருப்புக்கோட்டை பொதுப்பணித்துறை அலுவலக உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முத்துப்பாண்டி, ஏப்., 21ல் வைகை அணையில் 'தெர்மாகூல்' அட்டை பரப்பும் திட்டத்தை முன்னின்று நடத்தினார். இத்திட்டம் தோல்வியில் முடிந்ததால் பணிமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இது குறித்து அவர் கூறுகையில் ''பணிமாற்றம் குறித்த உத்தரவு ஏப்., 20ல் வந்துவிட்டது. எனக்கு மட்டுமல்ல 234 பேருக்கு மாற்றம் வந்துள்ளது. 'தெர்மோகூல்' விவகாரத்தால் மாற்றப்பட வில்லை. அடுத்த மாதம் நான் பணி ஓய்வு பெறுகிறேன்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us