ADDED : ஜூலை 12, 2011 10:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தனியார் மருத்துவமனையில் தவறி விழுந்த நர்ஸ் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகள் அகிலாண்டேஸ்வரி (23). இவர் பெரம்பலூரில் தங்கி தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அகிலாண்டேஸ்வரி தங்கி இருந்த விடுதியில் உள்ள குளியல் அறைக்கு சென்றபோது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அகிலாண்டேஸ்வரி உயிரிழந்தார். இது குறித்து, பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.

