ADDED : ஆக 05, 2011 02:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்தூர்: ஆத்தூரில் உள்ள ஆதிதிராவிட உண்டுஉறைவிட பள்ளியில் அமைச்சர் சுப்ரமணியன் ஆய்வு நடத்தினார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்ரமணியன் இன்று ஆய்வு நடத்தினார். அங்கு மாணவர்களுடன் மதிய உணவு அருந்திய அவர், அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். மேலும் உண்டு உறைவிட பள்ளியில் தங்கியிருக்காத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.